மலைப் பகுதிகளில் உயரம் அதிகமாகும் போது காதுகள் அடைத்துக் கொள்வது ஏன்?
பொதுவாக மலைப்பகுதியில் உயரம் ஏறி செல்ல செல்ல ,வளியழுத்தம் வெகுவாக குறையும்.
இதை சமன் செய்வதற்காக உடம்பின் உள்ளிருக்கும் அழுத்தம் எங்கெங்கு பாகங்கள் இலகுவாக இருக்கின்றதோ அதன் வழியாக வெளியேற துடிக்கும்.
ஆகவே காதுக்கு உள்ளிருக்கும் பாகமான யூஸ்ட்ச்சியான் டியூப் (Eustachian Tubes) என்ற அமைப்பின் முரண்டு பிடிக்கும் காரணமாக காதடைப்பு ஏற்படுகின்றது.
இது தான் யூஸ்ட்ச்சியான் டியூப் என்று கூறப்படுகின்றது.
இந்த யூஸ்ட்ச்சியான் டியூப் என்ற அமைப்பு தான் உடம்பின் உள்ளும் ,வெளியும் இருக்கும் அழுத்தத்தை காதில் சமன் செய்கின்றது.
கடல்மட்டத்தில் ஊதப்பட்ட பலூன் மலையேற்றத்தின்போது கொஞ்சம் கொஞ்சமாக அதுவே பெரிதாகி வெடிப்பதும் இதனால் தான்.
விமானங்களில் உயரே செல்லச்செல்ல தானியக்கமாக அழுத்தம் சமன் செய்யும் வசதி உண்டு .அதனால் மேலேறும் சமயமும் ,கீழிறங்கும் சமயமும் மட்டும் இந்த சங்கடத்தை அனுபவிக்க நேரும்.