இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கருப்பு பட்டை அணிந்து வந்த இங்கிலாந்து வீரர்கள்! என்ன காரணம் தெரியுமா?
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடியதன் காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி Leeds-ல் இருக்கும் Yorkshire Cricket மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி, இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல், 78 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதன் பின் ஆடி வரும் இங்கிலாந்து அணி இரண்டாம் நாளான இன்று சற்று முன் வரை 2 விக்கெட் இழப்பிற்கு 232 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
Our players are wearing black armbands today to honour the passing of our former captain Ted Dexter.#ENGvIND pic.twitter.com/VF6ZeTEuVs
— England Cricket (@englandcricket) August 26, 2021
இப்போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங் ஆட வந்த போது, கருப்பு பட்டை அணிந்து வந்தனர். இதற்கான காரணத்தை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் Ted Dexter தன்னுடைய 86 வயதில், இன்று புதன் கிழமை காலமானார்.
அவரது மரணத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், இங்கிலாந்து வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.
Ted Dexter இங்கிலாந்து அணிக்காக 62 டெஸ்டில் விளையாடி, 47.89 என்ற சராசரியுடன் 4500 ஓட்டங்களுக்கு மேல் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.