பிரித்தானியாவில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க காரணம் என்ன? வெளியான தகவல்
பிரித்தானியாவில் கடந்த ஓராண்டாக, உணவு பொருட்களின் விலை அதிகரிப்பதற்கான காரணம் பற்றிய ஆராய்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரிக்கும் உணவு பொருட்களின் விலை
பிரித்தானியாவில் கடந்த 1977ஆம் ஆண்டு முதல் இல்லாத பண வீக்கம் தற்போது அதிகரித்திருப்பதாகவும், உணவுப் பொருட்கள் மற்றும் மது பானங்களின் விலை 19.2 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் தேசிய ஆராய்ச்சி குழு அறிவித்தது.
@afp
மேலும் இறைச்சிகள், தயிர், காய்கறிகளின் விலை முன்பிருந்ததை விட இரட்டிப்பு விலைக்கு விற்கப்படுவதால், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பிரட், சாக்லேட் , தானியங்கள் போன்றவற்றின் விலையும் அதிகரித்து வருகிறது. பணவீக்கத்திற்கான காரணத்தை பற்றி national statistics குழுவினர் ஆராய்ந்துள்ளனர். தற்போது உணவு பொருட்களின் விலை அதிகரிப்பதற்கான காரணத்தை பற்றி பார்க்கலாம்.
குறைவான அறுவடை
பிரித்தானியாவிற்கு பொதுவாக தெற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பியாவிலிருந்து, அதிகப்படியான உணவு பொருட்கள் இறக்குமதியாகிறது. அந்த நாடுகளில் தொடர்ந்து வரும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
@gettyimages
இதனால் குறைவான அளவே அறுவடை செய்யப்படுகிறது. குறிப்பாக விநியோகஸ்தர்கள் தக்காளி, மிளகு, காய்கறிகள் போன்றவற்றை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதாக உள்ளது.
உக்ரைன் போர்
பிரித்தானியாவின் தேசிய விவசாய சங்கத்தின்(NFU) தலைவர் மினிட்டி பட்டெர்ஸ், உக்ரைன் போரை பணவீக்கம் உண்டாவதற்கான திருப்பு முனை என்கிறார்.
கடந்த ஆண்டு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பின்னர், ஐரோப்பா ரஷ்ய எரிவாயுவைத் தானே விலக்கிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
@gettyimages
இதனால் உணவு உற்பத்தி மற்றும் போக்குவரத்துக்குத் தேவையான செலவு அதிகரித்துள்ளது. பின்னர் அவை அதிக விலையாக நுகர்வோரை சென்றடைகிறது.
கடந்த மார்ச் 2022 மற்றும் ஜனவரி 2023க்கு இடையில் சராசரியாக, 34.3% உணவு மற்றும் மதுபான உற்பத்தியாளர்கள், உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைந்ததாக அறிவித்துள்ளனர்.
'ஐரோப்பாவின் ரொட்டி கூடை' என அழைக்கப்படும் உக்ரைனின் தானியங்களை, போரினால் உற்பத்தி செய்து அனுப்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
மற்ற காரணங்கள்
பிரித்தானியாவில் முன்பு குறைவான விலைகளில் சிறிய நாடுகளிலிருந்து பெறப்பட்ட, உணவு பொருட்கள் தற்போது தடையாகியிருப்பதால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
@gettyimages
மேலும் சில்லறை வியாபாரிகள் அதிக விலை கொடுத்து பொருட்களை விநியோகஸ்தர்களிடம் வாங்குவதால், அவர்களால் அதிக விலை நிர்ணயிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளின் கூட்டணியிலிருந்து பிரித்தானியா விலகியதிலிருந்து, வெளிநாடுகளிலிருந்து பணிக்கு வருபவர்களின் விகிதம் குறைந்துள்ளதால், குறிப்பிட்ட வேலைகளை செய்ய ஆட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென தேசிய ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.