நீங்கள் மனிதரா அல்லது ரோபோவா என்று Google ஏன் கேட்கிறது தெரியுமா?
Google எப்போதும் மனிதரா அல்லது ரோபோவா என்று கேட்கும்போது எல்லாம் கோபத்தில் தான் பதிலளித்திருப்போம்.
ஆனால் இது ஏன் கேட்கிறது என்பது பற்றி யோசித்து இருப்பது குறைவு தான். அது பற்றிய தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
Google என்பது,
கூகுள் (Google) என்பது, அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு செயற்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். இணையத் தேடுபொறித் தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயற்படுகிறது.
கூகுள் தேடுபொறி, இதன் முதன்மையான சேவை ஆகும். இது பலருக்கு பல வகையில் உதவுகிறது.
நாம் கூகுள் மூலம் ஒரு தேடல் மேற்கொள்ளும் போது ”நீங்கள் ரோபோ இல்லை என்பதை உறுதிபடுத்துங்கள்” என்று ஒரு திரை தோன்றும். அதில் பல புகைப்படங்களை காண்பித்து ஏதாவது ஒரு குறிப்பிட்ட பொருளை கண்டுபிடிக்க சொல்லும்.
இதை சரியாக கண்டுபிடித்தால் மாத்திரமே மனிதர்கள் என ஒத்துக்கொள்ளும். இதற்கான காரணத்தை பார்க்கலாம்.
மனிதனா அல்லது ரோபோவா என்று ஏன் கேட்கிறது?
அந்த திரையில் தோன்றும் Captcha மூலம் நம் மவுசின் கர்சர் இயக்கம் கண்காணிக்கப்படும்.
ரோபோக்கள் நேரடியான இதை செய்து முடித்து விடும். ஆனால் மனிதர்கள் மவுசை இயக்கினால், அதில் ஒரு சீரற்ற தன்மையை உணரமுடியும். இந்த அசைவை வைத்து மனிதரா அல்லது ரோபோவா என்பதை கூகுள் தெரிந்துக்கொள்ளும்.
ஒரு சில தளங்கள் குறிப்பிட்ட அல்காரிதம் மூலம் இயங்குகின்றன. அப்படி இந்த captchaவை பாதிக்கப்பட்ட கணினிகள் இயக்கலாம்,சில சமயங்களில் இந்த தேடல்கள் ஸ்பாம் ஆக கூட இருக்கலாம்.
இதனால் பாதுகாப்பு குறித்த பிரச்னைகள் ஏற்படும் என்பதே காரணமாக இருகின்றது.
மேலும் தேடல்களை படிக்கும் கூகுள், பயனர்களுக்கு எளிதான, துல்லியமான தகவல்களை வழங்க தன்னை மேம்படுத்திக்கொள்ளவே கையாளுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |