நம் தாத்தா பாட்டிகளுக்கு இவ்வளவு வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படவில்லையே... என்ன காரணம்?
நம் தாத்தா பாட்டிகளுக்கு இவ்வளவு வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படவில்லையே, என்ன காரணம் என ஊட்டச்சத்து நிபுணர் ஒருவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அவர் கூறிய சில தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
நம் தாத்தா பாட்டிகளுக்கு...
நம் தாத்தா பாட்டிகள், கடைக்குச் சென்று மாமிசம், மீன் மற்றும் காய்கறிகளை உள்ளூர் சந்தையில் வாங்கி சமையல் செய்தார்கள்.

இப்போதுபோல் அப்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள் அவ்வளவாக இல்லை. இப்போதும் அதேபோன்ற நல்ல உணவுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும், அவை எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்கிறார் ஊட்டச்சத்து நிபுணரான Yor D Andonova.
நாம் செய்யும் மூன்று மிகபெரிய தவறுகள்
வேகவேகமாக சாப்பிடுவது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது மற்றும், 'Empty Plate Syndrome' , அதாவது, பிளேட்டில் சாப்பாடு வைத்துவிட்டோம் என்பதற்காக, தேவைக்கு அதிகமானாலும் பிளேட்டை காலி செய்வது ஆகியவைதான் நாம் செய்யும் மூன்று மிகபெரிய தவறுகள் என்கிறார் Andonova.

இந்த மூன்று தவறுகளையும் நாம் அதிக அளவில் தொடர்ந்து செய்கிறோம் என்று கூறும் அவர், அவைதான் நம் உடல் நலத்தின் மீது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்கிறார்.
அத்துடன், மன அழுத்தமும் நமது ஜீரண மண்டலத்தை கடுமையாக பாதிக்கும் என்கிறார் Andonova.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |