இளவரசர் வில்லியம் பயணித்த விமானத்தில் ஹரியை அனுமதிக்காதது ஏன்?: திடுக் காரணம்...
உடல் நலமில்லாமல் இருந்த பிரித்தானிய மகாராணியாரைக் காண, இளவரசர் வில்லியமும் ஹரியும் தனித்தனியே பயணித்த விடயம் கேள்விகளை எழுப்பியது.
ராஜகுடும்ப வாரிசுகள் ஒன்றாக ஒரே விமானத்தில் பயணிக்கக்கூடாது என விதி உள்ளதாம்.
உடல் நலமில்லாமல் இருந்த பிரித்தானிய மகாராணியாரைக் காணச் செல்லும்போது, இளவசர் வில்லியம் பயணித்த விமானத்தில் ஹரிக்கு இடமளிக்கப்படாததற்கான காரணம் என்ன என்பது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சகோதரர்கள் இருவருக்கும் இடையிலிருந்த பிரச்சினை அதற்கு காரணம் அல்ல என்கிறார், ராஜ குடும்ப எழுத்தாளரும், அரசியல் சாசன நிபுணருமான Brian Hoey.
இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் தனித்தனியே பயணித்ததன் பின்னணியில், ஒரு வலுவான அரசியல் சாசன காரணம் உள்ளது என்கிறார் Hoey.
Image: Michal Wachucik
அதாவது, ராஜகுடும்ப வாரிசுகள் ஒன்றாக ஒரே விமானத்தில் பயணிக்கக்கூடாது என்னும் விதியையே மகாராணியார்தான் அறிமுகம் செய்தாராம். அதற்குக் காரணம், விமான விபத்து போன்ற அசம்பாவிதம் ஏதாவது நிகழ்ந்துவிட்டால், விபத்தில் ஒரே நேரத்தில் ராஜகுடும்ப வாரிசுகளுக்கு அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த விதியாம்!
அத்துடன், ஏற்கனவே ராஜகுடும்பத்தினர் மூவர் விமான விபத்துக்களில் உயிரிழந்திருக்கிறார்கள். 1937ஆம் ஆண்டு, இளவரசர் பிலிப்பின் சகோதரியான இளவரசி Cecile, எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தபோது விமான விபத்தில் சிக்க, நடுவானில் பிரசவித்தும், தாயும் சேயும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை ராஜகுடும்பம் ஏற்கனவே சந்தித்துள்ளது.
மேலும், 1942ஆம் ஆண்டு, மகாராணியாரின் உறவினரான இளவரசர் ஜார்ஜ், 39 வயதே இருக்கும்போது விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், மகாராணியாரின் சகோதரர் முறை உறவினரான இளவரசர் வில்லியம் என்பவர், 1972ஆம் ஆண்டு, விமான விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
ஆகவேதான் மகாராணியார் இனி ராஜகுடும்ப வாரிசுகள் ஒன்றாக ஒரே விமானத்தில் பயணிக்கக்கூடாது என்னும் விதியை அறிமுகம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.