ஹொட்டல்களில் வெள்ளை நிற போர்வைகள் பயன்படுத்தப்படுவது ஏன் தெரியுமா?
பொதுவாக பெரும்பாலான ஹொட்டல்களில் தலையணை, போர்வைகள் மற்றும் துண்டுகள் என அனைத்தும் வெள்ளை நிறங்களிலே இருக்கும்.
வெள்ளை நிற போர்வைகளை பயன்படுத்துவதால் நடைமுறையில் சில நன்மைகள் கிடைக்கின்றன.
அத்துடன் அறைகளில் தங்குவோருக்கு உளவியல் ரீதியான சில நன்மைகள் கிடைப்பதோடு, நிர்வாக ரீதியாக ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் சில நன்மைகள் கிடைக்கின்றன.
சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் ஒரு குறியீடாகவே வெள்ளை நிறம் பார்க்கப்படுகிறது.

வெள்ளை நிற போர்வைகளில் ஏற்படும் சிறிய கறையை கூட எளிதில் கண்டறிந்து விரைவாக சுத்தம் செய்வதற்கு வசதியாக இருக்கும்.
மேலும், விருந்தினர்களுக்கு ரம்மியமான ஒரு உணர்வை தருவதால் விருந்தினர்களுக்கு ஹொட்டலின் மீது நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.
இதர நிறங்களை கொண்ட விரிப்புகளை விட வெள்ளை நிற போர்வைகளை துவைப்பது மிகவும் எளிமையானது.
இவற்றை அதிக வெப்பநிலையில் துவைத்தாலும் அதனால் நிறம் மங்காததால் அதிக திறன் கொண்ட டிடர்ஜெண்டுகளை பயன்படுத்தியும் இவற்றை சுத்தம் செய்ய முடியும்.

இதனால் பராமரிப்பு மிகவும் எளிமையாக இருப்பதோடு நீண்டகால அடிப்படையில் அதற்கான பராமரிப்பு செலவு கணிசமாக குறையும்.
அதேபோல், விருந்தினர்களின் நீண்ட தொலைதூர பயணங்களுக்கு பின் நல்ல இதமான உறக்கத்திற்கு உளவியல் ரீதியாக வெள்ளை நிற பெட்ஷீட்டுகள் பெரிதும் உதவுகின்றன.
பல்வேறு இடங்களில் உள்ள பல்வேறு ஹொட்டல்களிலும் ஒரே மாதிரியான வெள்ளை நிற விரிப்புகளை பயன்படுத்துவது என்பது நிர்வாக ரீதியாக மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.
ஏனெனில், ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்வதற்கும் குறைவான விலையிலும் வெள்ளை நிற கிடைக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |