ஓய்வு பெறுவதற்கு முன் நான் வர்ணனையாளராக மாறியது ஏன்? முதன் முறையாக உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்
இந்திய அணி வீரரான தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறாமல் நான் வரணனையாளராக மாறியது ஏன் என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்தி, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் திடீரென்று வர்ணனையாளராக மாறினார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறாமல், தினேஷ் கார்த்திக் வர்ணனையாளார் அவதாரம் எடுத்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. தற்போது கூட இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக இருந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், முதலில் இந்த பிம்பத்தை உடைக்க விரும்புகிறேன். ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே வர்ணனை செய்ய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறதா ? கூடைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் இருக்கும் வீரர்கள் ஓய்வு நேரத்தில் வர்ணனை செய்வது போன்று நானும் செய்கிறேன். இங்கிலாந்து இலங்கை தொடருக்கான டி20 போட்டிகளில் கூட அந்த அணியின் டெஸ்ட் பவுலர் ஆண்டர்சன் வர்ணனை செய்தார்.
இதனால் அவர் என்ன ஓய்வை அறிவித்து விட்டார் என்று கூறமுடியுமா ? அதே போன்று தான் நானும் நான் இப்போதைக்கு ஓய்வு அறிவிக்க வாய்ப்பு இல்லை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவேன். அதே சமயம் எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் நான் வர்ணனையாளர் பணியை செய்வேன்