எடப்பாடியை முதல்வராக்கியது ஏன்? முதல் முறையாக விளக்கம் கொடுத்த சசிகலா! வெளியான ஆடியோ
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்கியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கு காரணமாக நான்கு சிறை தண்டனை அனுபவித்து தமிழகம் திரும்பிய சசிகலா, அரசியலில் ஒரு புயலைக் கிளப்புவார் என்று எதிர்பார்த்த போது, அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
அதன் பின் நடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக தோல்வியை சந்தித்து. இதைத் தொடர்ந்து சசிகலா, அதிமுக தொண்டர்கள் பலரிடம் போனில் பேசும் ஆடியோ அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது,
அதன் படி, சமீபத்தி சசிகலா தருமபுரி அதிமுக தொண்டர் பாலுவுடன் பேசியுள்ளார். அதில், ஜெயலலிதா இருந்த போது தொடர்ந்து இரு முறை ஆட்சி அமைத்த நிலையில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது.
இதனால் எனது தந்தை, மாமனார் ஆகியோர் கடும் விரக்தியில் உள்ளதாக, பாலு சசிகலாவிடம் கூறுகிறார்.
இதற்கு சசிகலா, எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி அதிமுக மீது கொங்கு மண்டல மக்களுக்கு அன்பும் பாசமும் அதிகம். அவர்களுடைய பிரதிநிதியான கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனச்சாமியை முதல்வராக்கினால் அந்த மண்டலத்தின் ஒட்டுமொத்த வாக்குகளும் அதிமுகவுக்கு கிடைக்கும். இதன் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமியை நான் முதல்வராக்கினேன்.
மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை.
தற்போது எடப்பாடி பழனிச்சாமியை ஏன் முதல்வராக்கினோம் என வருந்துகிறேன். உங்கள் தந்தை, மாமனாரிடம் சொல்லுங்கள், நான் விரைவில் வந்து கட்சியை சரி செய்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.