கனடாவுக்கு உதவியாக இருந்த 2,900 அகதிகளின் புலம்பெயர்தல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாதது ஏன்?: நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி
கனேடிய இராணுவத்துக்கு உதவிய 2,900 ஆப்கன் அகதிகளின் புலம்பெயர்தல் விண்ணப்பங்களுக்கு என்ன ஆயிற்று என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் புலம்பெயர்தல் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
NDP கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Jenny Kwan, ஆப்கானிஸ்தானில் கனேடிய இராணுவத்துக்கு உதவியாக இருந்த மொழிபெயர்ப்பாளர்கள் முதலான ஆப்கன் நாட்டவர்களின் கனடாவுக்கு புலம்பெயர்வதற்கான விண்ணப்பங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதற்கு கனேடிய புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser விளக்கமளிக்கவேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
கனடாவுக்கு உதவியாக இருந்தவர்கள் என சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டவர்களாகிய 3,800 ஆப்கன் நாட்டவர்களில் 900 பேருடைய புலம்பெயர்தல் விண்ணப்பங்கள் மட்டுமே புலம்பெயர்தல் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
அவர்களுடைய மற்றும் அவர்களுடைய குடும்பத்தாரின் உயிர்கள் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்த Jenny, தான் இந்த விடயத்தை சீரியஸாக பின்தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், புலம்பெயர்தல் அமைச்சரின் அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர், மேலும் அதிக அழைப்பிதழ்களை தங்கள் அலுவலகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வரும் வாரங்களில் அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த ஆப்கன் நாட்டவர்கள் தாலிபான்களால் நடத்தப்படும் பாஸ்போர்ட் அலுவலகங்களுக்குச் சென்று பாஸ்போட்டுக்கு விண்ணப்பிக்கவேண்டிய அவசியம் ஏற்படாத வகையில், பயண ஆவணங்களை அவர்களுக்கு அளிக்குமாறு அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்கனவே மொழிபெயர்ப்பாளர்களையும் அவர்களுடைய குடும்பத்தினரையும் வேட்டையாட தாலிபான்கள் காத்திருக்கும் நிலையில், அவர்கள் சென்று நாங்கள் தப்பிச் செல்வதற்கு எங்களுக்கு பாஸ்போர்ட் கொடுங்கள் என்று கேட்க முடியுமா?
அப்படிக் கேட்டால் அவ்வளவுதான், தாலிபான்களின் அடுத்த குறி பாஸ்போர்ட் கேட்டவர்கள்தான் என்கிறார் Jenny.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி யோகரட்ணம் தில்லைநாதர் மூர்த்தி
Ipoh, Malaysia, London, United Kingdom, சென்னை, India, கொழும்பு
09 May, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022