புதிதாக சில குறிப்பிட்ட திட்டங்களின் கீழ் புலம்பெயர்தல் விண்ணப்பங்களை வரவேற்காதது ஏன்? கனேடிய புலம்பெயர்தல் அமைப்பு விளக்கம்
கனடா, புதிதாக பெடரல் திறன்மிகு பணியாளர் திட்டம் மற்றும் கனேடிய பணி அனுபவம் கொண்டோருக்கான புலம்பெயர்தல் திட்டம் ஆகியவற்றின் கீழ் விண்ணப்பங்களை வரவேற்காதது ஏன் என்பதற்கு கனேடிய புலம்பெயர்தல் அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
ஏற்கனவே சமர்ப்பிக்கப்படுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், புதிதாக பெடரல் திறன்மிகு பணியாளர் திட்டம் மற்றும் கனேடிய பணி அனுபவம் கொண்டோருக்கான புலம்பெயர்தல் திட்டம் ஆகியவற்றின் கீழ் விண்ணப்பங்களை நிலுவையில் வைத்துள்ளதாக கனேடிய புலம்பெயர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதாவது, 2021ஆம் ஆண்டுக்கான புலம்பெயர்தல் இலக்கை எட்டும் நோக்கில், கனேடிய பணி அனுபவம் கொண்டோருக்கான புலம்பெயர்தல் திட்டம் மற்றும் தற்காலிக வாழிட உரிமத்திலிருந்து நிரந்தர வாழிட உரிமத்துக்கு மாறுவோர் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை வேகமாக பரிசீலிப்பதற்காக, பெடரல் திறன்மிகு பணியாளர் திட்டத்தின் கீழ் (Federal Skilled Worker Program (FSWP) அழைப்பு விடுப்பதை, 2020 டிசம்பரில் நிறுத்திவிட்டதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு that Immigration, Refugees and Citizenship Canada (IRCC) தெரிவித்துள்ளது.
அப்படி எடுக்கப்பட்ட அந்த முடிவின் காரணமாக, ஏராளமான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமலே இருந்துவிட்டன.
அதாவது, 2021 அக்டோபர் நிலவரப்படி, 1.8 மில்லியன் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாமலே குவிந்துவிட்டன. இந்த விண்ணப்பங்களில், நிரந்தர வாழிட உரிம விண்ணப்பங்கள், தற்காலிக வாழிட உரிம விண்ணப்பங்கள், கனேடிய குடியுரிமை விண்ணப்பங்கள் ஆகியவையும் அடங்கும். 2021 அக்டோபர் 27 நிலவரப்படி, 99,968 எக்ஸ்பிரஸ் நுழைவு நிரந்தர வாழிட உரிம விண்ணப்பங்கள் ( Express Entry permanent residence applications) பரிசீலனைக்காக காத்திருக்கின்றன.
கனேடிய புலம்பெயர்தல் அமைப்பு அளித்த விளக்கம் 2021, செப்டம்பர் 3 திகதியிடப்பட்டுள்ளதாகும்.
ஆக, 2021 அக்டோபர் 27 நிலவரப்படி, 99,968 எக்ஸ்ப்ரஸ் நுழைவு நிரந்தர வாழிட உரிம விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3 அன்று இந்த எண்ணிக்கை 108,500 ஆக இருந்தது. எனவே, விண்ணப்பங்கள் பரிசீலனையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிந்துகொள்ள முடிகிறது. அதாவது செப்டம்பர் 3க்கும் அக்டோபர் 27க்கும் இடையில், 8,500 எக்ஸ்பிரஸ் நுழைவு நிரந்தர வாழிட உரிம விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, செப்டம்பர் 3க்கும் அக்டோபர் 27க்கும் இடையில் எக்ஸ்பிரஸ் நுழைவு நிரந்தர வாழிட உரிம விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதையடுத்து, மற்ற விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டிருக்கலாம் என கணிக்கலாம்.
தற்போது, 2021ஆம் ஆண்டின் மீதமுள்ள நாட்களில், அல்லது 2022இன் ஆரம்ப நாட்களுக்குள், எக்ஸ்பிரஸ் நுழைவு விண்ணப்பங்களை பரிசீலிக்கும் திட்டத்துடன் கனேடிய புலம்பெயர்தல் அமைப்பு அதிகாரிகள், புலம்பெயர்தல் துறை துணை அமைச்சரை விரைவில் அணுக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
மேற்கூறப்பட்ட தற்காலிக கொள்கை மாற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெடரல் திறன்மிகு பணியாளர் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள்தான். அக்டோபர் 25 நிலவரப்படி, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு அளித்த புள்ளிவிவரத்தின்படி, எஸ்பிரஸ் நுழைவு திட்ட விண்ணப்பதாரர்களில், தகுதியுடைய 165,000 பெடரல் திறன்மிகு பணியாளர் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் இருக்கிறார்கள்.
அதாவது, எஸ்பிரஸ் நுழைவு திட்ட விண்ணப்பதாரர்களில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட காத்திருப்பவர்களில், பெடரல் திறன்மிகு பணியாளர் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் 85 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.