4 நிறங்களில் பாஸ்போர்ட் வழங்கும் இந்திய அரசு - என்ன வேறுபாடு?
ஒவ்வொரு நாட்டு குடிமக்களுக்கும் பாஸ்போர்ட் முக்கியமான ஆவணமாக உள்ளது. பாஸ்போர்ட் இல்லாமல் வேறு எந்த நாட்டிற்கு உள்ளேயும் நுழைய முடியாது.
அதே போல், இந்திய அரசு தனது குடிமக்களுக்கு 4 நிறங்களில் பாஸ்போர்ட் வழங்குகிறது.
4 நிற பாஸ்போர்ட் ஏன்?
இந்தியா பாஸ்போர்ட் வைத்துள்ளனர் யார்? என்ன காரணத்திற்காக வெளிநாடு வந்துள்ளார் என இந்த பாஸ்போர்ட் நிறம் அடையாளப்படுத்துகிறது.
மேலும், பாஸ்ப்போர்ட்டின் நிறத்தை வைத்தே வந்துள்ள நபர் யார் என எளிதாக கண்டறிய குடியேற்ற அதிகாரிக்கு உதவுகிறது.
கருநீல நிற பாஸ்போர்ட்
இது வழக்கமாக சாதாரண இந்தியா குடிமக்கள் அனைவருக்கும் வழங்கப்படும் பாஸ்போர்ட் ஆகும்.
இதனை, படிப்பு, வணிகம், வேலை, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெள்ளை நிற பாஸ்போர்ட்
அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் அலுவல் பணிக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் போது, இந்த வெள்ளை நிற பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
இந்த பாஸ்போர்ட்டை பெற பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் தேவை.
சிவப்பு நிற பாஸ்போர்ட்
தூதர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு சிவப்பு நிற பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
இந்த பாஸ்போர்ட் பெறுவதற்கும் பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் தேவை.
ஆனால் வெள்ளை மற்றும் சிவப்பு நிற பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு, குடியேற்ற சோதனைகளில் சிறிது தளர்வுகள் இருக்கும்.
ஆரஞ்சு நிற பாஸ்போர்ட்
குறைந்த பட்ச கல்வித்தகுதி உடையவர்கள் குறிப்பிட்ட வேலைகளுக்காக வெளிநாடுகளும் செல்லும் போது, ஆரஞ்சு நிற பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. .
இந்த ஆரஞ்சு நிற பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் கூடுதல் குடியேற்ற சோதனைகளை எதிர்கொள்வார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |