இந்தியாவின் ரயில் நிலையங்களில் மருந்து கடைகள் ஏன் இருப்பதில்லை தெரியுமா?
பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் ரயில் துறைக்கு பெரிய பங்கு உள்ளது.
குறைந்த கட்டணம், பாதுகாப்பான பயணம், அதிவேகத்தில் செல்லக் கூடியது என்பதால் சாமானிய மக்கள் கூட ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.
இந்நிலையில், ரயில் நிலையங்களில் உணவு, குளிர்பானங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கிடைக்கின்றன.
ஆனால் பெரும்பாலான நிலையங்களில் தனியாக மருத்துவக் கடைகள் இல்லாததற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கடந்த காலங்களில் சில பெரிய ரயில் நிலையங்களில் மட்டுமே மருத்துவக் கடைகள் செயல்பட்டு வந்தன.
குறிப்பாக மருத்துவர் வசதி இருந்த நிலையங்களிலேயே இத்தகைய கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் காலப்போக்கில் அதிக எண்ணிக்கையிலான கடைகள் காரணமாக நடைமேடைகளில் நெரிசல் அதிகரித்ததால் பயணிகள் சிரமம் அடைந்தனர்.
இதையடுத்து புதிய தனியார் மருத்துவக் கடைகளுக்கு அனுமதி வழங்குவதை ரயில்வே நிறுத்தியது. அதற்கு பதிலாக, பல்நோக்கு விற்பனை நிலையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இங்கு புத்தகங்கள், இதழ்கள், சிற்றுண்டிகள் மற்றும் சில பொதுவான மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.
மருத்துவரின் பரிந்துரை தேவையில்லாத மருந்துகள் மட்டுமே இந்த கடைகளில் கிடைக்கும். பரிந்துரைச் சீட்டு தேவைப்படும் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதில்லை.
இதற்கிடையில், பயணிகளுக்கு அவசர மருத்துவ உதவி வழங்க ரயில்வே சிறப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
மேலும், TTE, ரயில் காவலர் மற்றும் நிலைய அதிகாரிகளுக்கு முதலுதவி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் முதலுதவி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |