ரோகித் சொல்லியும் கேட்காத கோலி? இந்திய அணியில் இருக்கும் பிரச்சனை அம்பலம்
நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியின் மூலம் கோலிக்கும், இந்திய அணியில் இருக்கும் சில வீரர்களுக்கு பிரச்சனை இருப்பது அம்பலமாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக் குறியாக உள்ளது. அதுமட்டுமின்றி டி20 தொடரில் கலக்கி வரும் இந்திய அணி, ஏன் இப்படி உலகக்கோப்பை டி20 போட்டியில் சொதப்பி வருகிறது என்ற கேள்வி பலருக்கும் எழுந்து வருகிறது.
அதற்கு ஏற்ற வகையில் நேற்றைய போட்டியில் அனுபவம் வாய்ந்த ரோகித்துடன் சேர்ந்து இஷான் கிஷனை இறக்காமல் கோலி, ராகுல் மற்றும் இஷான் கிஷனை களமிறக்கினார். இது மிகப் பெரியாக கேள்வியாக உள்ளது.
அதுமட்டுமின்றி நேற்று நியூசிலாந்து அணிக்கு பந்து வீசும் போது ரோகித் பந்து வீச்சாளர்கள் தேர்வு குறித்து, அவரிடம் சில விஷயங்களை கூறியதாக தெரிகிறது. இது நேரலையில் பார்த்த போது தெரிந்தது.
ஆனால் ரோகித் சரியாக என்ன சொன்னார் என்பது தெரியவில்லை, இருப்பினும் கோலி அந்த சமயத்தில் ரோகித்தின் பேச்சை கேட்காதது போன்று தான் தெரிந்தது.
இதனால் இந்திய அணியின் ஏதோ ஒரு பிரச்சனை இருப்ப்பது கிட்டத்தட்ட அம்பலமாகியுள்ளது. ஆனால் அது என்ன என்பது இந்த உலகக்கோப்பை முடிவதற்குள் தெரிந்துவிடும்.