கருப்பு நிறம் என்றால் கெட்டது என்று சொல்வது ஏன்? ஜோதிடம் கூறும் உண்மை
இந்து சாஸ்திரத்தின் படி வீட்டில் நடக்கும் சுப காரியங்கள் எது நடந்தாலும் கருப்பு நிறம் அணியக்கூடாது என்று கூறுவார்கள்.
வேறு எந்த நிறம் வேண்டுமானாலும் அணியலாம் கருப்பை மட்டும் ஏன் அப்படி கூறுகிறார்கள் தெரியுமா?
சனி பகவானுக்கு பிடித்த நிறம் கருப்பு என்பதாலும், கருப்பு எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்பதால் கருப்பு நிறம் அசுபமாக கருதப்படுகிறதாம்.
மேலும் கருப்பு நிறம் காளி தேவியையும் குறிக்கிறது. காளியின் தாக்கத்தால் அமாவாசை இரவு இருள் சூழ்ந்துவிடும் என்பது ஐதீகம்.
இதனால் காளி தேவி வாழ்க்கையில் அவர் அனைத்து வண்ணங்களையும் நீக்கி கருமையை கொடுப்பதாக சொல்லப்படுகிறது.
இதனாலேயே கருப்பு நிறம் அசுபம் என சொல்லப்படுகிறது.
நல்ல நாட்களில் கருப்பு நிற ஆடை அணிவதால் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து அந்த சுபம் கெட்டதாக ஆகிவிடும் என்ற அச்சத்தால் கருப்பு நிறத்தை அசுபம் என்று கருதுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |