ஏன் விமானத்தில் பாதரசம் எடுத்து செல்ல அனுமதி இல்லை?
பொதுவாக உயர்தரமான வாகனங்கள் ,அதிவேக விரைவு வாகனங்கள் ,அதிக விலையுடைய வாகனங்கள் எல்லாம் இலகுவான எடையுடைய ,ஆனால் அதே நேரம் உறுதியான உலோகமான அலுமினியத்தை பயன்படுத்துகின்றார்கள் .
விமானமும் அவ்வாறே .உற்பத்தி செய்யும்போது எடைகுறைப்பிற்காகவும் ,பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அலுமினியமானது விமானத்தின் உடல் பாகங்களில் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றது .
இரும்பு ,தகரம் போல இவ்வுலோகம் எளிதில் ஆக்சிஜனுடன் இணைந்து ஆக்சிஜனேற்றம் அடையாது .அந்த உலோகங்களைப்போல துருவும் பிடிக்காது .
ஆனால் ,அந்த கட்டுக்கோப்பை பாதரசமானது குலைத்துவிடும் .அலுமினியத்துடன் பாதரசம் சேர்ந்து வேதி வினை புரிந்து அமால்கமாக மாறும் .
அது சமயம் அலுமினியத்தை எளிதில் ஆக்சிஜனேற்றமடைய வழி வகுக்கும் .அவ்வாறு நேர்ந்து ,ஏதேனும் விமானத்தின் ஒரு இடத்தில் அலுமினிய உடல் பக்கத்தில் உலோகம் வலுவிழந்து துளை விழுந்து விட்டால் என்னவாகும் ? அவ்வளவு பேரும் அதோ கதிதான் .
எனவே தான் விமானங்களில் பாதரசத்துக்கு இடமில்லை என்று கூறுகிறார்கள்.