நம் உடல் ஏன் இவ்வளவு தண்ணீரினால் ஆனது?
நம் உடல் பல கோடிக்கணக்கான உயிருள்ள செல்களால் ஆனது. அவைகளுக்கு உணவு மற்றும் ஆக்ஸிஜன் கொடுக்க வேண்டும்.
பின் அவற்றிலிருந்து கழிவுகளை பெற்று உடம்பில் இருந்து வெளியேற்றவேண்டும்.
அதற்கு போக்குவரத்து நடைபெற வேண்டும். திரவத்தில் தான் அணுக்கள் நகரமுடியும். திடப்பொருளில் அணுக்கள் ஒன்றையொன்று இறுகி எப்போதும் இணைப்புடன் இருக்கும். எளிதாக பிரிக்க முடியாது.
திரவத்தில் அது பிரிவது எளிதாக நடைபெறும். இரத்த சுழற்சி இந்த போக்குவரத்திற்கு மிகவும் பயன்படுகிறது. அதவாது பொருட்களை அதில் எளிதாக சேர்க்கலாம் அல்லது பிரிக்கலாம்.
இரத்த நுண் குழாய்கள் (capillaries) வழியாக ஒவ்வொரு செல்லும் உணவை பெறுகிறது மற்றும் கழிவை சேர்க்கிறது. எந்த செல்லும் இரத்த நுண் குழாயிலிருந்து 10 micrometre க்கு அதிகமான தொலைவில் இல்லை.
அதனால் தான் நம்முடைய எடை 60% திரவ நிலையில் உள்ளது. அது மூன்று வகையாக உள்ளது
- செல்களுக்கு உள்ளே (30லி)
- செல்களுக்கு வெளியே (12லி)
- இரத்தமாக (5 லி).
நம் உடல் பல கோடிக்கணக்கான செல்களால் ஆனது. அவைகளுக்கு தேவையான உணவையும் அதிலிருந்து கழிவு பொருட்களை பெறவும் போக்குவரத்து நடைபெற வேண்டும். அது திரவ நிலையில் தான் நடைபெற முடியும். அதானால் தான் நம்முடைய எடை 60% நீராக, திரவமாக உள்ளது.