ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கு கருண் நாயர் இடம் பெறாதது ஏன்? இந்திய தேர்வுக்குழு தலைவர் விளக்கம்
விஜய் ஹசாரே கோப்பை 2024-25 தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாததற்கான காரணத்தை அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
சிறப்பான பார்மில் கருண் நாயர்
விஜய் ஹசாரே கோப்பை 2024-25 தொடரில் விதர்பா அணிக்காக விளையாடும் கருண் நாயர், 8 போட்டிகளில் 752 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதில் 5 சதங்களை அடித்துள்ளார்.
2017-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் முச்சதம் அடித்து உலக அளவில் கவனம் பெற்ற இவர், மீண்டும் தனது பழைய பார்மை மீட்டெடுத்துள்ளார்.
இந்நிலையில் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கருண் நாயர், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் அகர்கர் விளக்கம்
இதற்கிடையில், இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், கருண் நாயருக்கு அணியில் இடம் கிடைக்காதது குறித்து விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "சிறப்பாக விளையாடும் அனைவரையும் அணியில் சேர்ப்பது என்பது சவாலானது. தற்போதுள்ள அணியில் ஏதேனும் காயம் ஏற்பட்டால், கருண் நாயர் குறித்து மீண்டும் ஆலோசிக்கலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |