நல்லா விளையாடியும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை கோஹ்லி நீக்கியது ஏன்? வெளியான தகவல்
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தரை கோஹ்லி நீக்கியது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றதால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கட்டாய வெற்றியை நோக்கி உள்ளது.
இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னை நடைபெற்று வருகிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில், சிறப்பாக விளையாடி வந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டுள்ளார்.
இதைக் கண்ட ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏன் நன்றாக விளையாடியும் வாஷிங்டன் சுந்தரை கோஹ்லி நீக்கினார் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இந்திய அணியில் இந்த மாற்றங்களை செய்தது ஏன் என்பது குறித்து கோஹ்லி கூறுகையில், அதில், கடந்த போட்டியில் நாங்கள் தெரிவு செய்த அணிக்கும் இப்போது தெரிவு செய்த அணிக்கும் நிறைய காரணம் இருக்கிறது . கடந்த போட்டியில் அக்சர் காயம் அடைந்ததால் வேறு வழி எங்களுக்கு இல்லை .
பும்ராவிற்கு ஓய்வு கொடுத்து இருக்கிறோம். இதனால் சிராஜ் வருகிறார். பும்ராவிற்கு அதிகமாக வொர்க் லோட் கொடுக்க கூடாது என்பதால் ஓய்வு கொடுத்து இருக்கிறோம்.
வாஷிங்க்டன் சுந்தர் கடந்த போட்டியில் நன்றாக ஆடினார். ஆனாலும் அவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை பிட்சில் இவரால் பேட்டிங் செய்ய முடிந்த அளவிற்கு விக்கெட் எடுக்க முடியவில்லை. அதேபோல் குல்தீப், அஸ்வின், சுந்தர் மூன்று பேரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி பவுலிங் செய்வார்கள். இதனால் பேட்ஸ்மேனுக்கு வெளியே பவுலிங் செய்யும் அக்ஸரை உள்ளே கொண்டு வந்து சுந்தரை கோஹ்லி நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
