வாடகை வீடுகளில் வசிப்போருக்காக குரல் கொடுக்க நாடாளுமன்றத்தில் யாருமில்லை: ஏன்?
கனடாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு ஆதரவாக குரல் கொடுப்பதில்லை. ஏன்?
செவியில் ஏறாத கோரிக்கைகள்
சமீபத்தில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடா அரசு, C-20: The Build Canada Homes Act என்னும் மசோதாவை முன்வைத்தபோது, அந்த மசோதாவில், வாடகை வீடுகளில் வசிப்போருக்கு பயனளிக்கும் வகையில் சில மாற்றங்களைக் கொண்டு வருமாறு மக்கள் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், அவர்கள் முன்வைத்த எந்த கோரிக்கையும் மசோதாவில் சேர்க்கப்படவில்லை!
காரணம் என்ன?
பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் உள்ள பெரும்பான்மை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொந்த வீடுகளில் வாழ்பவர்கள்.
அத்துடன், ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வருவாய் பார்ப்பவர்கள்.
நோவா ஸ்கொஷியா நாடாளுமன்ற உறுப்பினரான Lena Metlege Diab, ஹாலிஃபாக்ஸில் 14 அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாடகைக்கு விட்டிருக்கிறாராம்.

கியூபெக் நாடாளுமன்ற உறுப்பினரான François-Philippe Champagne, இங்கிலாந்திலுள்ள லண்டனில் வீடுகளை வாடகைக்கு விட்டிருக்கிறாராம்.
சர்ரே நாடாளுமன்ற உறுப்பினரான Randeep Sarai, பர்னபியிலும் சர்ரேயிலும் பல அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாடகைக்கு விட்டிருக்கிறாராம்.
நாடாளுமன்ற கீழவை உறுப்பினர்களான 103 பேருக்கு, தங்கள் அல்லது தங்கள் துணைவர் பெயரில் உள்ள வீடுகளிலிருந்து வாடகை வருகிறதாம்.

அதாவது, இவர்களே வாடகை மூலம் வருவாய் பார்க்கும் நிலையில், அவர்கள் எப்படி வாடகை வீடுகளில் வசிப்போருக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்கள்?
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |