பிட்புல் நாய்கள் ஆபத்தானவை என்று ஏன் சொல்லப்படுகின்றது?
உலகிலேயே ஆபத்தான நாய்களில் இரண்டாமிடம் பிடிப்பது பிட்புல் ரக நாய்களே ஆகும்.
இது குட்டையான உருவம், பெரிய வலிமையான உடல் தசைகள், சிறிய கண்கள் என இந்த நாயை பார்க்கும் போதே ஒருவிதமான அச்சம் ஏற்படும்.
இவை பார்ப்பதற்கு மிகவும் மூர்க்கத்தனமாக இருந்தாலும் இவற்றின் குணமும் எஜமானரின் குடும்பத்தையும், வீட்டையும் துணிச்சலாக பாதுகாக்கும் காவலாளியாகவும் இருக்கும்.
இருப்பினும் சண்டை செய்வதில் வல்லவர்கள் அதுமட்டுமல்ல இவற்றின் எதிரிகளை வீழ்த்த இவற்றின் ஒரு கடியே போதுமானது. ஏனெனில் இவற்றின் தாடைகள் அவ்வளவு வலிமை மிக்கதாகும்.
குறிப்பாக நாய்களை வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் சற்று செலவு அதிகம். அவற்றுக்கென பிரத்யேக உணவுகள், முடி கொட்டாமல் இருக்க ஷாம்பு என இந்த நாய்களுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும்.
ஒருவருக்கு மட்டுமே கட்டுப்படும் பழக்கத்தை கொண்ட இந்த நாய் இனங்கள் ஒருபுறம், மிகவும் அன்பாகவும், மறுபுறம் மிக மூர்க்கமாகவும் நடந்து கொள்ளும் குணத்தை கொண்டது.
இந்த வகை நாய்களை பெரும்பாலான நாடுகள் தடைசெய்துள்ளன.
2017-ஆம் ஆண்டு மட்டும் 20க்கும் மேற்பட்டவர்களை போட்டுதள்ளியது, கடந்த 10 வருடங்களில் மட்டும் 400 மேற்பட்டவர்களை இவைகள் காவுவாங்கியுள்ளன ஆய்வுகள் சொல்லுகின்றன.