பிளாஸ்டிக் நாற்காலிகளில் இருக்கும் துளைகளுக்கான காரணம் என்ன தெரியுமா?
பொதுவாக வீட்டில் இருக்கும் நாற்காலியின் பின்புறத்தில் துளைகள் இருப்பதை அனைவரும் பார்த்திருப்பீர்கள்.
நாற்காலியின் பின்புறத்தில் இருக்கும் அந்த துளைகளுக்குப் பின்னால் சில காரணங்கள் உள்ளது.
பிளாஸ்டிக் நாற்காலிகள் அடுக்கி வைக்கப்படும்போது, அவை நாற்காலிகளுக்கு இடையில் ஒரு காற்றுப் பையை உருவாக்குகின்றன.
இதன் விளைவாக நாற்காலிகளுக்கு இடையில் Suction என்று விளைவு ஏற்படுவதால் நாற்காலிகளைப் பிரிப்பது மிகவும் கடினமாகிறது.
இந்த துளை காற்று வெளியேற அனுமதிக்கிறது, எனவே நாற்காலிகள் ஒன்றாக ஒட்டிக்கொள்ளாது. மேலும் அவற்றை எளிதாகப் பிரிக்கலாம்.
அதேபோல், நாற்காலிகள் தயாரிக்கும் செயல்முறையானது சூடான பிளாஸ்டிக்கை அச்சுகளில் ஊற்றுவதன் மூலம் உருவாக்கப்படுகிறது.
இந்த துளை அச்சுகளிலிருந்து நாற்காலி எளிதாக வெளியே வர உதவுகிறது. மேலும், எளிதில் நகர்த்தக் கூடியதாகவும், நீண்ட காலம் உழைக்கிறது.
குறிப்பாக, இந்த துளை குறைந்த பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தவும் உதவுகிறது, இது உற்பத்திச் செலவுகளை பெருமளவில் குறைக்கிறது.
மேலும், இந்த துளைகள், அமர்ந்திருப்பவர் நீண்ட நேரம் அவர்களை குளிர்ச்சியாகவும், வசதியாகவும் உணர வைக்கிறது.
அதேபோல், நாற்காலியில் தண்ணீர் சிந்தினாலும் தேங்கி நிற்காது, துளை அதை எளிதில் வெளியேறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |