இளவரசி கேட்... இந்தப் பெயர் இவ்வளவு பிரபலமானது ஏன்?

United Kingdom Royal Family Kate Middleton
By Balamanuvelan Apr 15, 2026 12:06 PM GMT
Report

பிரித்தானியாவின் வருங்கால மன்னரான இளவரசர் வில்லியமுடைய மனைவி கேட். அவரது உண்மையான பெயர், கேத்தரின் எலிசபெத் மிடில்ட்டன் (Catherine Elizabeth Middleton). வேல்ஸ் இளவரசி என்பது அவரது பட்டம்.

ஆனால், ஊடகங்கள் அவரை இளவரசி கேட் அல்லது கேட் மிடில்ட்டன் என்றே அழைக்கின்றன. 

இளவரசி கேட்... இந்தப் பெயர் இவ்வளவு பிரபலமானது ஏன்? | Why Princess Of Wales Kate Middleton Name Famous

தன்னை அறிமுகம் செய்துகொள்ளும்போது, என் பெயர் கேத்தரின் என்றுதான் கூறுகிறார் வில்லியமுடைய மனைவி. ஆனாலும் அவரை யாரும் கேத்தரின் என்று அழைப்பதில்லை.

இளவரசி கேட் என்னும் பெயர் பிரபலமானது எப்படி?

2011ஆம் ஆண்டு கேத்தரின் இளவரசர் வில்லியமை திருமணம் செய்தபோது, ‘Her Royal Highness The Duchess of Cambridge’ என்னும் பட்டம் அவரை வந்தடைந்தது. 

இளவரசி கேட்... இந்தப் பெயர் இவ்வளவு பிரபலமானது ஏன்? | Why Princess Of Wales Kate Middleton Name Famous

2022ஆம் ஆண்டு எலிசபெத் மகாராணியார் மரணமடைந்ததைத் தொடர்ந்து, இளவரசர் சார்லஸ், மன்னர் சார்லஸ் ஆனார்.

அப்போது அவர் தன் மகனான இளவரசர் வில்லியமை வேல்ஸ் இளவரசர் என்றும், இளவரசி கேத்தரினை வேல்ஸ் இளவரசி என்றும் அறிமுகம் செய்துவைத்தார்.

மன்னர் சார்லஸ், ட்ரம்ப் சந்திப்பில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி இல்லை: தர்மசங்கட பின்னணி

மன்னர் சார்லஸ், ட்ரம்ப் சந்திப்பில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி இல்லை: தர்மசங்கட பின்னணி

என்றாலும், ஊடகங்கள், குறிப்பாக வெளிநாட்டு ஊடகங்கள் அவரை வேல்ஸ் இளவரசி என்றோ, இளவரசி கேத்தரின் என்றோ எழுதுவதில்லை, இளவரசி கேட் அல்லது கேட் மிடில்ட்டன் என்றே எழுதுகின்றன.

கேத்தரின் வில்லியமை திருமணம் செய்வதற்கு முன்பே, ஊடகங்கள் அவரை கேட் மிடில்ட்டன் என்ற பெயரில்தான் அறிமுகம் செய்துவைத்தன. மக்கள் மனதில் அந்தப் பெயர் ஆழமாக பதிந்துவிட்டது. 

இளவரசி கேட்... இந்தப் பெயர் இவ்வளவு பிரபலமானது ஏன்? | Why Princess Of Wales Kate Middleton Name Famous

மேலும், கேட் என்ற பெயர் அதிகம் தேடப்படுவதால், அதைப் பயன்படுத்தினால்தான் ஊடகங்களுக்குப் பார்வை அதிகம் கிடைக்கும் என்பதால், ஊடகங்களும் அந்த பெயரையே பயன்படுத்துகின்றன.

அமெரிக்கர்களைப் பொருத்தவரை, ராக் என்னும் ஒரு நடிகர் இருக்கிறார், அவரது உண்மையான பெயர் ட்வெய்ன் ஜான்சன். ஆனால் அவரை ராக் என்றால்தான் பலருக்கும் தெரியும்.

அதேபோல, பிரித்தானியர்களைப் போல் அல்லாது, ராஜ குடும்பம் இல்லாத அமெரிக்கர்களுக்கு, வேல்ஸ் இளவரசி என்னும் பட்டமெல்லாம் அதிகம் பரிச்சயம் இல்லை.

ஆக கூகுளில் அவரைத் தேடுகிறவர்கள் இளவரசி கேட் அல்லது கேட் மிடில்ட்டன் என்றே தேடுகிறார்கள்.

இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், பிரித்தானியாவைப் பொருத்தவரை, வேல்ஸ் இளவரசி என்றால் அது ஒருவர்தான். அது மறைந்த இளவரசி டயானா!

ஆக, மக்களுக்குப் பிடித்த அந்த பெயரை, தான் பயன்படுத்துவது மக்களுக்குப் பிடிக்காமல் போகலாம் என்பதால் கேத்தரினும் தன்னை வேல்ஸ் இளவரசி என அழைக்க விரும்புவதில்லை.

அவர் தன்னை கேத்தரின் என்று அழைப்பதையே விரும்பினாலும், ஊடகங்கள் அவரை கேட் என்று அழைக்க, இணையத்தில் அவரைத் தேடுபவர்களும் கேட் என்றே அழைக்க, கூகுள் தரவுகளைப் பார்த்தால், கேட் மிடில்ட்டன் என்னும் பெயர், அதிகம் தேடப்படும் பதங்களில் ஒன்றாக உள்ளது தெரியவருகிறது.

அத்துடன், கேத்தரின் தன்னை மக்களில் ஒருவராக காட்டிக்கொள்ள விரும்பும் நிலையில், வேல்ஸ் இளவரசி என்பதை விட, கேட் மிடில்ட்டன் என்னும் பெயர் நடுத்தர வர்க்கத்திலுள்ள ஒருவரின் பெயரை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளதும் மக்கள் அந்தப் பெயரை விரும்பக் காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US