T20 தொடர் ஏலத்தில் விலை போகாத டிராவிட் மகன் - ஏன் தெரியுமா?
மகாராஜா கோப்பைக்கான வீரர்கள் ஏலத்தில் எந்த அணியும் சமித் டிராவிட்டை வாங்கவில்லை.
KSCA Maharaja Trophy
கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன்(KSCA) கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மகாராஜா கோப்பை என்ற T20 தொடரை நடத்தி வருகிறது.
6 அணிகள் விளையாடி வரும் 2025 ஆம் ஆண்டுக்கான மகாராஜா கோப்பை, வரும் ஆகஸ்ட் 11 ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 27 வரை, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதற்கான வீரர்கள் ஏலம், நேற்று நடைபெற்றது. இதில், தேவ்தத் படிக்கல் அதிகபட்ச தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார். ஹூப்ளி டைகர்ஸ் அணி, ரூ.13.20 லட்சத்திற்கு அவரை வாங்கியுள்ளது.
ஏலம் போகாத சமித் டிராவிட்
இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட்(samit dravid) கலந்து கொண்டார். ஆனால், எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை.
19 வயதான சமித் டிராவிட், 2024 மகாராஜா டிராபி ஏலத்தில், மைசூர் வாரியர்ஸ் அணியால் ரூ.50000 க்கு வாங்கப்பட்டார். ஆனால், 7 போட்டிகளில் விளையாடிய அவர், 82 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
11.71 துடுப்பாட்ட சராசரி, 113.89 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். ஆல் ரவுண்டரான அவருக்கு பந்து வீசவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
குல்பர்கா மிஸ்டிக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 24 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்ததே அவரது அதிகபட்சமாக இருந்தது. இதுவே அவர் எடுத்த ஒரே 30+ ஓட்டமாகும். இதன் காரணமாக எந்த அணியும் வரை வாங்கவில்லை என கூறப்படுகிறது.
முன்னதாக 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற கூச் பெஹர் கோப்பையில், கர்நாடக அணி சார்பில் விளையாடிய அவர், 8 போட்டிகளில் 362 ஓட்டங்கள் எடுத்ததோடு, 16 விக்கெட்களை வீழ்த்தி கவனம் ஈர்த்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |