தனது 4 கோடி லம்போர்கினி காரை ரசிகருக்கு வழங்கிய ரோஹித் சர்மா - ஏன் தெரியுமா?
ரோஹித் சர்மா தனது 4 கோடி லம்போர்கினி காரை ரசிகருக்கு வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரோஹித் சர்மாவின் லம்போர்கினி கார்
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் அணித்தலைவரான ரோஹித் சர்மா, சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ரோஹித் சர்மா மெர்சிடிஸ் பென்ஸ், ரேஞ்ச் ரோவர், லம்போர்கினி போன்ற ஆடம்பர கார்களை பயன்படுத்தி வருகிறார்.
அதில், 4 கோடி மதிப்பிலான நீல நிற Lamborghini Urus கார் அவருக்கு மிகவும் விருப்பமான ஒன்று. இந்த காருக்கு 0264 என்ற நம்பர் பிளேட்டை வாங்கியுள்ளார்.
2014 ஆம் இலங்கை எதிரான ஒருநாள் போட்டியில், ரோஹித் சர்மா 264 ஓட்டங்கள் எடுப்பார். இதுவரை ஒரு நாள் போட்டியில், தனிநபர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டம் இதுவாகும்.
இதன் நினைவாக, தனது லம்போர்கினி காருக்கு 0264 என்ற நம்பர் பிளேட்டை வாங்கியிருப்பார். தற்போது, ரசிகர் ஒருவருக்கு ரோஹித் சர்மா இந்த காரை வழங்கியுள்ளது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகருக்கு கார்
2025 ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்னர், Dream11 நிறுவனத்தின் விளம்பரத்தில் தோன்றிய ரோஹித் சர்மா, குறிப்பிட்ட போட்டியில் வெற்றி பெறுபவருக்கு தன்னுடைய லம்போர்கினி காரை வழங்குவதாக அறிவித்தார்.
— R✨ (@264__ro) May 19, 2025
அதேபோல், வெற்றி பெற்ற நபருக்கு ரோஹித் சர்மா, தன்னுடைய காரை வழங்கியுள்ளார். அந்த நபரும், அவரது தந்தையும் ரோஹித் சர்மாவிடமிருந்து காரை பெரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனக்கு பிடித்தமான 0264 என்ற நம்பர் பிளேட் உடைய காரை ரோஹித் சர்மா வழங்கியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |