இலங்கைக்கு எதிரான போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் விளையாடாத காரணம் - என்ன தெரியுமா?
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் இடம்பெறாத காரணத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடந்த இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் நீண்ட இடைவேளைக்கு பிறகு சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்ட நிலையில் ருத்துராஜ் கெய்க்வாட் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் அதிருப்தியடைந்த நிலையில் அவர் அணியில் இடம்பெறாத காரணத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதன்படி வலது மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக முதல் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் தேர்வில் ருத்துராஜ் கெய்க்வாட்டின் பெயர் சேர்க்கப்படவில்லை. நமது பிசிசிஐ மருத்துவ குழுவினர் கெய்க்வாட்டை கவனித்து வருகிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாளை நடைபெறும் 2வது டி20 போட்டியில் அவர் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.