பள்ளி பேருந்துகள் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டுமே இருக்கிறது தெரியுமா?
பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு விதமான கல்வி அமைப்புகள் உள்ளன.
கல்வி முறை வேறுபட்டாலும் உலகின் அனைத்து நாடுகளிலும் கல்வியில் பொதுவாக இருக்கும் சில விஷயங்கள் உள்ளன.
உலகம் முழுவதும் பள்ளிப் போக்குவரத்தின் எளிதில் அடையாளம் காணக்கூடிய சின்னங்களில் ஒன்று மஞ்சள் நிற பள்ளி பேருந்து.
அந்தவகையில், பள்ளிப் பேருந்துகள் ஏன் எப்போதும் மஞ்சள் நிறத்தில் மட்டுமே இருக்கின்றன என்று பார்க்கலாம்.
விடியற்காலை, மாலைப்பொழுது, மூடுபனி மற்றும் மழை போன்ற நேரங்களில் மஞ்சள் நிறமானது எளிதில் புலப்படும் வண்ணங்களில் ஒன்றாகும்.
எனவே, சாலையில் நடப்பவர்கள் பள்ளிப் பேருந்தை தொலைவில் இருந்து மிக எளிதாகப் பார்க்க முடியும்.
அதேபோல் மஞ்சள் நிறத்தில், கருப்பு எழுத்துக்களை வேறுபடுத்தி பார்ப்பதால் பள்ளிப் பெயர்கள் மற்றும் பேருந்து எண்கள் எளிதாகப் படிக்கப்படும்.
குறிப்பாக, பாதுகாப்பு மற்றும் நடைமுறை காரணங்களுக்காக இந்த நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த மஞ்சள் நிறம் மற்ற ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கையை குறிப்பதால் பள்ளி பேருந்துகளில் பயணிக்கும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிப்பார்கள்.
பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பு அம்சத்தில் பள்ளிப் பேருந்துகளின் நிறம் முக்கியப்பங்கு வகிக்கிறது.
மேலும், உலகின் பல நாடுகளில் உள்ள பள்ளிகளில் இந்த மஞ்சள் பேருந்துகளே பயன்படுத்தப்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |