தமிழக வீரர் ஷாருக்கானை 5 கோடிக்கு மேல் ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது ஏன்? பஞ்சாப் அணி விளக்கம்
ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தமிழக வீரர் ஷாருக்கானை 5 கோடிக்கு மேல் கொடுத்து ஏன் எடுத்தோம் என்பது குறித்து பஞ்சாப் அணி விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான ஐபிஎல் ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்றது.
இந்த ஐபிஎல் ஏலத்தில், பஞ்சாப் அணி தமிழக வீரரான ஷாருக்கானை 5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இது பெரிய அளவில் பேசப்பட்டது.
இது குறித்து பஞ்சாப் அணியின் உரிமையாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சதீஷ் மேனன் இது குறித்து கூறுகையில், ஷாருக் கான் மிகவும் அற்புதமான திறமை வாய்ந்தவர்.
இப்போது முடிவடைந்த சையத் முஷ்டாக் அலி டிராபி 2021 தொடரில் அற்புதமான பேட்டிங் பங்களிப்பை தனது அணிக்கு வழங்கினார். மேலும், நாங்கள் ஒரு மேட்ச் பினிஷிங் செய்யக்கூடிய ஒரு திறமையான பேட்ஸ்மேனைத் தேடினோம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) ஐபிஎல் 2020 ஆம் ஆண்டில் அந்த பணிக்கு க்ளென் மேக்ஸ்வெல்லை தேர்ந்தெடுத்தோம்.
ஆனால் அது கை கொடுக்கவில்லை.
ஷாருக்கான், உள்நாட்டு போட்டிகளில் தனது திறமையை நன்றாக வெளிப்படுத்தி வருகிறார். அது எங்களுக்கு அவர் மீதான மதிப்பை கூட்டியது.