குழந்தைகளுக்கு Bottle Feeding Night-ல பண்ணக்கூடாது! ஏன் தெரியுமா?
பிறந்த குழந்தைக்கு, தாய்ப்பால் போல் சிறந்த, ஆரோக்கியமான உணவு வேறு எதுவும் இருக்க முடியாது. குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் இந்த அமிர்தம், குழந்தையின் உரிமை.
மற்ற எந்த உணவிலும் இல்லாத அளவிற்கு, தாய்ப்பாலில்தான் அதிகச் சத்துக்கள், என்சைம்ஸ், ஹார்மோன்ஸ், வளர்ச்சி காரணிகள், விட்டமின் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தி எல்லாம் அடங்கியுள்ளது.
குழந்தை பிறந்து, குறைந்தது ஆறு மாதம் வரையிலாவது, கண்டிப்பாக தாய்ப்பால் புகட்டல் வேண்டும். இருப்பினும் இன்றைய காலத்தில் சில தாய்மார்கள் Feeding Bottle பாலை சேமித்து கொடுக்கின்றார்கள்.
இதனை இரவு நேரங்களில் கொடுப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றார்கள். அந்தவகையில் ஏன் குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் Bottle Feeding பண்ணக்கூடாது என்று பார்ப்போம்.