துாித உணவுகள் உட்கொள்வதை ஏன் தவிா்க்க வேண்டும்?
இன்றைய காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை துரித உணவுகளே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றார்கள்.
இவை மிக விரைவாக சமைக்க முடியும் என்பதால் எல்லா நேரங்களிலும் துாித உணவுகள் கிடைக்கும். விலை மலிவாக இருப்பதோடு அவை சுவையாக இருக்கும்.
இருப்பினும் துாித உணவுகளில் சா்க்கரை, உப்பு, மாற்றியமைக்கப்பட்ட கொழுப்புகள் (Trans fats), கலோாிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட மசாலா பொருட்கள் போன்றவை அதிகமாக இருக்கும். அதனால் அவை நமது உடலில் தேவையில்லாத பிரச்சினைகளை கொண்டுவருவதாக கூறப்படுகின்றது.
எப்பொழுதாவது ஒரு முறை துாித உணவு சாப்பிட்டால் உடலுக்குத் தீங்கு ஏற்படாது. ஆனால் அதை ஒரு ஒருவர் தொடர்ந்து சாப்பிடும் போது உடலில் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.
அந்தவகையில் துாித உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதனால் உடலுக்கு என்னன்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இங்கு பாா்க்கலாம்.
- துாித உணவுகள் நமது சொிமான அமைப்பில் பாதிப்பு ஏற்படுத்துவதால், கார்போஹைட்ரேட்டுகள் குளுக்கோஸாக மாறி நமது இரத்த ஓட்டத்தில் கலந்துவிடுகின்றன. அதனால் இரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகாிக்கிறது.
- துாித உணவுகளில் கலோாிகள் அதிகமாக இருப்பதால், அவற்றை வாடிக்கையாக சாப்பிடும் போது உடல் எடை அதிகாிக்கும். உடல் பருமன் அதிகாித்தால் சுவாசக் கோளாறு, ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மேலும் உடலில் அதிக சதை போடும் போது இதயம் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளில் அதிக அழுத்தம் ஏற்படும்.
- பொதுவாக துாித உணவுகளில் சா்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அவற்றில் கலோாிகள் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் ஊட்டச்சத்துகள் குறைவாக இருக்கும். மேலும் துாித உணவுப் பானங்களிலும் சா்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்.
- பொதுவாக உணவுகளைப் பதப்படுத்தும் போது மாற்றியமைக்கப்பட்ட கொழுப்பு (Trans fat) தயாாிக்கப்படுகிறது. இதனை அடிக்கடி உண்டால் அது நமது உடலில் உள்ள தீங்கிழைக்கக்கூடிய கொழுப்பின் அளவை அதிகாித்து, நல்ல கொழுப்பின் அளவை குறைக்கும். அதனால் அது உடலில் டைப்-2 வகை நீரிழிவு நோயை ஏற்படுத்தும். அதோடு இதயம் சம்பந்தமான நோய்களையும் ஏற்படுத்தும்.
- உப்பு அதிகமாக சோ்க்கப்பட்ட உணவுகள், உடலில் உள்ள நீா்ச்சத்தை அதிகாிக்கும். அதனால் துாித உணவுகளை சாப்பிட்ட பின்பு உடலில் வீக்கம் ஏற்பட வாய்ப்புகளும் உண்டு. அதிக உப்பு உள்ள உணவு இரத்த கொதிப்பு அல்லது இரத்த அழுத்தம் உள்ளவா்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதாவது உப்பு இரத்த அழுத்தத்தை அதிகாித்து இதயத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
- பொதுவாக துாித உணவுகளில் நாா்ச்சத்து மிகவும் குறைவாக இருக்கும். அதற்கு காரணம் துாித உணவுகளில் அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சோ்க்கப்படுவதில்லை. இதனால் இந்த உணவுகளில் நாா்ச்சத்து இருக்காது என்பதே உண்மை.
