இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா! ஏன் தெரியுமா?
இந்திய அணிக்கு எதிரான போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி கருப்பு பேண்ட் அணிந்து விளையாடுவதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து, மதிய இடை வேளையில் விக்கெட் இழப்பின்றி 83 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. துவக்க வீரர்களான கே.எல்.ராகுல் 29 ஓட்டங்களும், மயங்க் அகர்வால் 46 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடி வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம், தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்கள் ஆட்சிக்கு எதிராகவும், நிறவெறிக்கு எதிராகவும் போராடிய தென் ஆப்பிரிக்காவின் பேராயர் Desmond Tutu இன்று காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இன்று கருப்பு பேண்ட் அணிந்து விளையாடி வருகின்றனர்.