இந்தியா மேப்பில் இலங்கை நாடும் காட்டப்படுவதற்கான காரணம் என்ன?
இந்திய வரைபடத்தில் இலங்கை நாட்டின் வரைபடமும் காட்டப்படுவதற்கான காரணத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
சிறு வயதில் இருந்தே நாம் இந்திய வரைபடத்தை பார்த்திருப்போம். இந்த வரைபடத்தில் பாகிஸ்தான், நோபாளம் உள்ளிட்ட நாடுகளை நீங்கள் பார்த்திருக்க முடியாது.
ஆனால், இந்தியா வரைபடத்தில் இலங்கை நாட்டின் வரைபடமும் இடம்பெற்றிருக்கும். இலங்கையின் மீது இந்தியாவிற்கு எந்த உரிமையோ அதிகாரமோ கிடையாது.
அப்படி இருக்கையில் இந்திய வரைபடத்தில் இலங்கை வரைபடமும் காட்டுவதற்கு ஒரே ஒரு காரணம் உள்ளது. இந்தியா வரைபடத்தில் இலங்கை நாட்டின் வரைபடமும் காட்டப்படுவதற்கு கடல்சார் சட்டம் தான் காரணம்.
அவ்வாறு காட்டப்படவில்லை என்றால் கடல்சார் சட்டத்தை மீறியதாக அர்த்தம். இந்த காரணத்தினால் தான் கட்டாயமாக இலங்கையும் காட்டப்படுகிறது.
இந்த கடல்சார் சட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு நாட்டின் எல்லையானது கடலுடன் இணைக்கப்பட்டிருந்தால் அந்த நாட்டின் எல்லை கடலில் இருந்து 200 நாட்டிக்கல் மைல் வரை இருக்கும். அதவாது சுமார் 370 கி.மீ வரை நீண்டிருக்கும்.
அதன்படி, அந்த இடத்தில் உள்ள தீவுகள், கட்டமைப்புகள் அவர்களது வரைபடத்தில் இருக்க வேண்டும். அந்தவகையில், இந்தியாவின் கடல் எல்லைக்குள் இலங்கை வருகிறது.
குறிப்பாக தமிழகத்தின் எல்லையான தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு 18 கி.மீ தூரம் மட்டுமே உள்ளது. இதனால் தான் இந்தியாவும் தனது மேப்பில் இலங்கையைக் காட்டுவது கட்டாயமாகிறது.
இந்த கடல்சார் சட்டம் மீதான முன்மொழிவை 1956 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டது. பின்னர் பல்வேறு விவாதங்களுக்கு பிறகு 1973 மற்றும் 1982-க்கு இடையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |