ஸ்டீவ் ஸ்மித் ஏன் ரிஷப் பாண்ட் மார்க்கை அழிக்கனும்? அதற்கான காரணத்தை விளக்கிய டிம் பெய்ன்
இந்திய அணிக்கெதிரான போட்டியின் போது ஸ்டீவ் ஸ்மித் ரிஷப் பண்ட் போட்டு வைத்திருந்த கார்ட்டை நீக்கவில்லை என அவுஸ்திரேலியா அணியின் தலைவர் டிம் பெய்ன் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இப்போட்டி டிராவில் முடிந்ததற்கு இளம் வீரரான ரிஷப் பாண்ட்டும் காரணம், அற்புதமாக விளையாடிய இவர் 97 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பவுலியன் திரும்பினார்.
இதையடுத்து இது குறித்து அவுஸ்திரேலியா அணியின் தலைவரான டிம் பெய்ன் கூறுகையில், இது குறித்து நான் ஸ்டீவ் ஸ்மித்திடம் பேசினேன். இதைக் கேட்டு அவர் மிகவும் ஏமாற்றம் அடைந்தார். தன்னுடைய செயல் எப்படி தவறாக புந்து கொள்ளப்பட்டுவிட்டது என்று வேதனையடைந்தார். ஆனால், ஸ்மித்தைப் பொறுத்தவரை இப்படி அடிக்கடி செய்வார். இது அவருடைய வழக்கம். அவர் ரிஷப் பாண்ட்டின் கார்ட்டை அழிக்கைவில்லை.
ஸ்டீவ் ஸ்மித் ஆடும்போது பார்த்தால் இது தெரியும், அவர் வழக்கமாகச் செய்வதுதான், இதில் ஒன்றும் தவறிருப்பதாக எனக்குப் படவில்லை. பேட்டிங் கிரீசில் நின்று அவர் பேட் செய்தால் என்ன செய்ய வேண்டும் என்று தன்னையே தான் காட்சிப்படுத்திக் கொள்ளும் ஒரு நிழல் பயிற்சிதான் அது.
நிச்சயமாக அவர் ரிஷப் பாண்ட்டின் கார்ட்மார்க்கை அழிக்கவில்லை, அப்படிச் செய்தால் இந்திய அணி இதனை மேலிடத்துக்கு புகாருக்கு எடுத்துச் சென்றிருப்பார்கள். அவர் டெஸ்ட்டில் மட்டுமல்ல உள்நாட்டு கிரிக்கெட்டிலும் இப்படி நிழல் பேட்டிங் செய்து பார்ப்பார். பேட்டிங்கின் போது அவர் பல விஷயங்களைச் செய்வார், அப்படிப்பட்ட ஒன்றுதான் இதுவும், ரிஷப் பாண்ட் மார்க்கைப் ஏன் அவர் அழிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
#AUSvIND #RishabhPant
— Manoj Singh Negi (@Manoj__negi) January 11, 2021
Australia's Steve Smith shadow-batted as he came to the crease after the drinks break, and proceeded to remove Rishabh Pant's guard marks.
#INDvAUS pic.twitter.com/YrXrh3UlKl