சூர்யகுமார் யாதவ்வை ஏன் எடுக்கவில்லை! தெரியவந்த உண்மை காரணம்
நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ்வை ஏன் எடுக்கவில்லை என்ற காரணம் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டியின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன் படி இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இதில் இஷான் கிஷன் 8 பந்தில் 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினார்.
குறிப்பாக இப்போட்டியில் சூர்யகுமார்யாதவ்விற்கு பதிலாக இஷான்கிஷன் களமிறக்கப்பட்டார்.
இது இந்திய அணியின் திட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் உண்மை காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.
சூர்யகுமார் யாதவ்விற்கு முதுகு வலி பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவ குழு அறிவுறித்தியதன் காரணமாகவே அவருக்கு அணியில் இடம் கொடுக்கப்படவில்லை என்று பிசிசி தரப்பு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.