சுவிட்சர்லாந்து வெளிநாட்டவர்களுக்கு விருப்பமான நாடாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம் என்ன?
வெளிநாட்டவர்கள் வாழ்வதற்கு உகந்த சிறந்த நாடுகள் பட்டியலில், தொடர்ந்து மூன்றாவது முறையாக சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் விலைவாசி அதிகம் என்பதையும் தாண்டி வாழ்க்கைத்தரத்துக்கு முக்கியத்துவமம் அளித்து வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வெளிநாட்டவர்கள் வாழ்வதற்கு உகந்த சிறந்த நாடுகளில் முதன்மையானதாக தேர்வு செய்துள்ளார்கள்.
பிரித்தானிய வங்கியான HSBCயின் வருடாந்திர சுவிஸ் வாழ் வெளிநாட்டவர்கள் தொடர்பான ஆய்வில், கொரோனா கட்டுப்பாடுகளின் மத்தியிலும் தன் வாழ்க்கைத்தரம் முதலான காரணங்களால் இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளது சுவிட்சர்லாந்து.
ஆய்வில் பங்கேற்ற 91 சதவிகித வெளிநாட்டவர்கள், சுவிட்சர்லாந்தில் குடியேறிய பிறகு, சுவிஸ் சுற்றுச்சூழல் சிறந்ததாக இருப்பதாக உணர்ந்ததாகவும், 86 சதவிகிதத்தினர் பாதுகாப்பாக உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில், மூன்று காரணிகளின் அடிப்படையில் நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டன. அவையாவன, வாழ்க்கைத்தரம், எதிர்காலம் குறித்த ஆர்வம் மற்றும் நம்பிக்கை என்பவையாகும்.
அத்துடன், முதலிடத்தைப் பெற, சுவிட்சர்லாந்துக்கு நிலைத்தன்மை ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் வாழும் சுமார் 92 சதவிகிதம் வெளிநாட்டவர்கள், கொரோனாவின் தாக்கத்தையும் மீறி, அடுத்த 12 மாதங்களுக்கு வாழ்வதற்கு நிலையான ஒரு நாடு சுவிட்சர்லாந்து என்று கூறியுள்ளார்கள்.
செவ்வாய்க்கிழமை வெளியான இந்த தரவரிசைப்பட்டியலில், இரண்டாவது இடத்தை அவுஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தை நியூசிலாந்திலும் பிடித்துள்ளன. அவற்றுக்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது.
இந்த ஆய்வு, 46 நாடுகளில் வாழும் 20,460 பேரிடம் நடத்தப்பட்டது.
இன்னொரு முக்கிய விடயம், ஐரோப்பிய நாடுகளிலேயே வெளிநாட்டவர்கள் வாழ்வதற்கு உகந்த சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்த ஒரே நாடு சுவிட்சர்லாந்து என்பதுதான்.