இந்திய அணியின் புதிய ஜெர்சியில் 3 ஸ்டார் ஏன் கொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா?
இந்திய அணியின் டி20 உலகக்கோப்பை தொடருக்கான புதிய ஜெர்சி வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அந்த ஜெர்சியில் இருக்கும் மூன்று ஸ்டார் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில், வரும் 24-ஆம் திகதி இந்திய அணி, தன்னுடைய முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றது.
Presenting the Billion Cheers Jersey!
— BCCI (@BCCI) October 13, 2021
The patterns on the jersey are inspired by the billion cheers of the fans.
Get ready to #ShowYourGame @mpl_sport.
Buy your jersey now on https://t.co/u3GYA2wIg1#MPLSports #BillionCheersJersey pic.twitter.com/XWbZhgjBd2
இந்நிலையில், இந்திய அணி அணிந்திருக்கும் ஜெர்சியில் மூன்று ஸ்டார்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மூன்று ஸ்டார்களும், இந்திய அணி உலகக்கோப்பை வென்றதை குறிப்பிடும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்திய அணி 1983-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையையும், 2007-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையையும், 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.