விமானப் பயணத்தின் போது கண்ணீர் வருவது ஏன் தெரியுமா?
விமானப் பயணத்தின் போது பிஞ்சு குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் தங்களை அறியாமல் கண்ணீர் விடுவது உண்டு என்றும், அதற்கு காரணங்கள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
ஒருவகை மன அழுத்தம்
கொலராடோ மாகாணத்தை சேர்ந்த உளவியலாளர் Jodi De Luca இதன் காரணங்களை விரிவாகப் பட்டியலிட்டுள்ளார். பொதுவாக விமானப் பயணம் என்பதே பலருக்கு கவலையைத் தூண்டும் விடையமாகவே இருந்து வருகிறது.
விமான நிலையத்திற்குச் செல்வது, பரிசோதனைகள் மற்றும் விமானத்தில் ஏறுவது ஆகியவை அழுத்தம் மற்றும் நிச்சயமற்ற உணர்வை உருவாக்கும். மட்டுமின்றி, விபத்தில் சிக்கி விடுமோ என்ற உள்ளுணர்வும் ஒருவகை மன அழுத்தத்தை உருவாக்கும்.
இதுவே விமானம் புறப்பட்டதும் கட்டுப்படுத்த முடியாமல் பலரும் கண்ணீர்விட காரணமாக அமைகிறது என்கிறார் உளவியலாளர் Jodi De Luca. அதிக உயரத்தில் பறப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும், இது நடத்தை மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளை பாதிக்கும் என்று லூகா விளக்குகிறார்.
மேலும் நீண்ட நேரத்திற்கு நமக்கு அறிமுகம் இல்லாதவர்களுடன் ஒரு சிறிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது அசௌகரியம் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தவும் காரணமாக அமையும்.
ஆண்களில் 15 சதவிகிதம்
நமது உடல் நீரிழப்பை ஏதிர்கொண்டால் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பித்துவிடும். சிலருக்கு தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போகும். சிலருக்கு தங்கள் பயணத்தின் நோக்கமும் ஒருவகை மன அழுத்தத்தை தூண்டும்.
@unsplash
அது பிரியாவிடையாக இருக்கலாம் அல்லது அறிமுகமில்லாத நாட்டுக்கு முதன்முறையாக செல்வதாக இருக்கலாம். இது போன்ற உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் பயணிகள் திரைப்படங்களை பார்க்கத் தொடங்கியதும் அழுது விடுவார்கள்.
ஆண்களில் 15 சதவிகிதமும் பெண்களில் 6 சதவிகிதமும் விமானப் பயணத்தின் போது திரைப்படம் பார்த்து அழுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இப்படியாக கண்ணீர் விடுவது அல்லது உணர்ச்சிவசப்படுவதில் இருந்து தப்பிக்க, பயணிகள் புதினங்களை வாசிக்கலாம், Sudoku அல்லது புதிர்களை கண்டுபிடிக்கலாம். மூளைக்கு வேலை அளித்தால் எதிர்மறை உணர்ச்சிகளிலிருந்து தப்பிக்கவும் கண்ணீர் விடுவதை குறைக்கவும் செய்யலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |