ஐபிஎல் ஏலத்தில் கிறிஸ் மோரிஸை ஏன் 16 கோடிக்கு மேல் எடுத்தோம்? ராஜஸ்தான் அணி சொன்ன காரணம்
ஐபிஎல் ஏலத்தில் தென் ஆப்பிரிக்கா வீரர் கிறிஸ் மோரிசை 16 கோடி ரூபாய்க்கு மேல் ஏன் ஏலத்தில் எடுத்தோம் என்று ராஜஸ்தான் அணி விளக்கம் கொடுத்துள்ளது.
சென்னையில் கடந்த 18-ஆம் திகதி நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில், தென் ஆப்பிரிக்கா வீரர் கிறிஸ் மோரிசை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
அவரின் அடிப்படை விலை வெறும் 75 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், அவரை இத்தனை கோடி கொடுத்து ஏன் எடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், இது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் சீப் ஆப்பரேட்டிங் ஆபீஸர் மெக்ரம் கூறியதாவது,முதலில் நான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தான் நன்றியை தெரிவிக்க வேண்டும் ஏனென்றால் அவர்கள் கிறிஸ் மோரிஸ் மீதான ஏலத்தை நிறுத்த வில்லை என்றால் அது எங்களுக்கு அது மிகப் பெரும் நெருக்கடியாக அமைந்திருக்கும் என்று கூறினார்.
மேலும், கிறிஸ் மோரிஸ்க்கு என்று தனித்துவமான திறமைகள் உள்ளது,அதனால்தான் நாங்கள் அவரை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்தோம்.
இவரால் லோ ஆர்டரில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும்,மேலும் டெத் ஓவர் வீசக்கூடியதில் வல்லவராகத் திகழ்வார்.இவருடைய அனுபவமும் திறமையும் நிச்சயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெறச் செய்யும் என்று கூறினார்.
