இளவரசி கேட்டுடன் வில்லியம் காதலில் விழக்காரணம் இதுதான்... அந்த கவர்ச்சி காட்சி மட்டும் இல்லை
இளவரசர் வில்லியம் கல்லூரியில் படிக்கும்போது, கேட் கவர்ச்சி உடை அணிந்து கேட்வாக் செய்ய, அதுதான் அவரை கேட் பக்கம் ஈர்த்தது என்ற செய்திகளை பலரும் கேள்விப்பட்டிருக்கலாம்.
அதில் உண்மை உள்ளது என்பதை மறுப்பதற்கும் இல்லை. ஆனால், இளவரசி கேட்டுடன் வில்லியம் காதலில் விழ இன்னொரு முக்கிய காரணம் உள்ளது என்கிறார்கள் ராஜ குடும்ப நிபுணர்கள்.
அந்த கவர்ச்சி காட்சி மட்டும் இல்லை
இளவரசர் வில்லியமும் கேட்டும் கல்லூரியில் படிக்கும்போது, கேட் கவர்ச்சி உடை அணிந்து கேட்வாக் செய்ய, இளவரசர் வில்லியம் அவரிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்.
ஆனால், அவர் மனதில் இடம் பிடித்தது கேட் மட்டுமல்ல, அவரது மொத்தக் குடும்பமும் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Duncan Larcombe என்பவர்.
15 வயதில் தாயை இழந்து, வெளியில் சொல்லமுடியாத மனக்காயங்களுடன், ரிசர்வ்ட் ஆக, தனிமையில் வாழ்ந்துவந்த இளவரசர் வில்லியம், இன்று எங்கு சென்றாலும் மக்களை ஈர்க்கும் ஒரு நபராக, ஒரு நல்ல கணவனாக, தந்தையாக உருவெடுக்க, கேட் முக்கிய காரணம் என்கிறார் அவர்.
கிடைத்த புதிய குடும்பம்
ஆனால், கேட் மட்டுமே அதற்குக் காரணம் அல்ல. கேட்டின் மொத்தக் குடும்பமும் அதற்குக் காரணம்.
அதாவது, அரண்மனையில் கட்டுப்பாடுகளுடன், கடுமையான மரபுகளைப் பின்பற்றி வாழ்ந்து, ஒருவருக்கொருவர் பிடிக்காத தந்தை தாயுடன் வாழ்ந்து, தாயையும் 15 வயதில் பறிகொடுத்தவர் வில்லியம்.
அப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்துவந்த வில்லியம், கேட்டைக் காதலிக்கத் துவங்கியபோது, கேட்டின் குடும்பம் இருகரம் நீட்டி அவரை வரவேற்றுள்ளது.
ஆக, கேட்டை மட்டுமின்றி, அப்பா, அம்மா, மூன்று பிள்ளைகள் என சந்தோஷமாக வாழ்ந்துவந்த, கேட்டின் அன்பிற்குரிய குடும்பம் வில்லியமுக்கு பிடித்துப்போனது.
தாயை இழந்து, தந்தையுடன் மட்டும் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்துவந்த தனக்கு ஒரு புதிய குடும்பம் கிடைத்ததுபோன்ற மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது வில்லியமுக்கு.
அதனால்தான் அவர் இன்றும் தன் மனைவி குடும்பத்தை அந்த அளவுக்கு, மதிக்கிறார், நேசிக்கிறார். ஆக, வில்லியம் கேட்டுடன் காதலில் விழ, கேட் மட்டுமல்ல, அவரது மொத்தக் குடும்பமும் காரணம் என்கிறார் Hugo Vickers என்னும் ராஜ குடும்ப நிபுணர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |