டிரம்ப்பிற்கு ரூ.217 கோடி வழங்கும் யூடியூப் - என்ன காரணம்?
டிரம்ப்பிற்கு ரூ.217 கோடி வழங்க யூடியூப் முன்வந்துள்ளது.
டிரம்ப்பின் சமூகவலைத்தளம் முடக்கம்
2021 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோய்ல்வியடைந்த பின்னர், 6 ஜனவரி 2021 அன்று, வாஷிங்டன்னில் உள்ள அமெரிக்கா தலைமையகத்தை(United States Capitol ) டிரம்ப்பின் ஆதரவாளர்கள் முற்றகையிட்டு தாக்குதல் நடத்தினர்.
அப்போது டிரம்ப்பின் சமூகவலைத்தள பதிவுகள் தணிக்கையை மீறியதாக காரணம் காட்டி, மெட்டா, எக்ஸ், யூடியூப் உள்ளிட்டவை டிரம்ப்பின் சமூகவலைத்தள கணக்குகளை இடைநீக்கம் செய்தன.
இதைத்தொடர்ந்தே டிரம்ப், Truth Social என்ற சமூகவலைத்தளம் ஒன்றை துவங்கினார்.
யூடியூப் 2 ஆண்டுகளுக்கு பிறகு, 2023 ஆம் ஆண்டிலே டிரம்ப்பின் யூடியூப் கணக்கு மீதான தடையை நீக்கியது.
இந்த இடைநீக்கம் தொடர்பாக டிரம்ப், இந்த நிறுவனங்களின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ரூ.217 கோடி
தற்போது இந்த வழக்கை தீர்ப்பதற்காக, டிரம்ப்பிற்கு 24.5 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.217 கோடி) செலுத்த யூடியூப்பின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் ஒப்புக்கொண்டுள்ளது.
இதில், 22 மில்லியன் டொலர் நேஷனல் மாலுக்கான அறக்கட்டளைக்கு செல்லும். மீதமுள்ள 2.4 மில்லியன் டொலர் அமெரிக்க கன்சர்வேடிவ் யூனியன் உள்ளிட்ட அமைப்புகளுக்கு வழங்கப்படும்.
இந்த வழக்குகளை தீர்ப்பதற்கு ஜனவரி மாதத்தில் மெட்டா 25 மில்லியன் டொலரும், எக்ஸ் 10 மில்லியன் டொலரும் டிரம்ப்பிற்கு வழங்கியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |