102க்கு ஆல்அவுட்! மேற்கிந்திய தீவுகளை மீண்டும் எகிற அடித்த வங்காளதேச அணி
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வங்காளதேச அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷமிம் ஹொசைன் அதிரடி
செயின்ட் வின்சென்ட்டில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள், வங்காளதேச அணிகள் மோதின.
முதலில் ஆடிய வங்காளதேச அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தது. எனினும் ஷமிம் ஹொசைன் 17 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் விளாசினார்.
மெஹிதி ஹசன் 26 (25) ஓட்டங்களும், ஜாகிர் அலி 21 (20) ஓட்டங்களும் எடுத்தனர். இதன்மூலம் வங்காளதேசம் 129 ஓட்டங்கள் எடுத்தது.
Sharp fielding 💪🏾 from the #MenInMaroon reaps rewards!🙌🏾 #WIvBAN | #WIHomeforChristmas pic.twitter.com/CgVu5UnFb6
— Windies Cricket (@windiescricket) December 18, 2024
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தஸ்கின் அகமது, மஹெதி ஹசன் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
பூரன், பாவெல் சொதப்பல்
நிக்கோலஸ் பூரன் 5 ஓட்டங்களிலும், அணித்தலைவர் ரோவ்மன் பாவெல் 6 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ரஸ்டன் சேஸ் 34 பந்துகளில் 32 ஓட்டங்களில் வெளியேற, அகேல் ஹுசைன் மட்டும் வெற்றிக்காக போராடினார்.
Johnson Charles is in the mood! 🏏💥#WIvBAN | #WIHomeForChristmas pic.twitter.com/rho7Zksqxq
— Windies Cricket (@windiescricket) December 18, 2024
31 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அகேல் ஹுசைன் கடைசி விக்கெட்டாக அவுட் ஆக, மேற்கிந்திய தீவுகள் 102 ஓட்டங்களுக்கு சுருண்டது.
வங்காளதேச அணியின் தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளும், மஹெதி ஹசன், தன்சிம் ஹஸன் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |