அறிமுக டெஸ்ட்டிலேயே 7 விக்கெட் வீழ்த்திய பவுலர்! 121 ரன்னுக்கு சுருண்ட மேற்கிந்திய தீவுகள் (வீடியோ)
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி 121 ஓட்டங்களுக்கு சுருண்டது.
கஸ் அட்கின்சன் மிரட்டல் பந்துவீச்சு
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
அறிமுக வீரரான கஸ் அட்கின்சன் (Gus Atkinson) தனது மிரட்டலான பந்துவீச்சு மூலம் மேற்கிந்திய தீவுகளை கதிகலங்க செய்தார்.
Brb just finding out what Gus Atkinson had for breakfast ?#EnglandCricket | #ENGvWI pic.twitter.com/gnyMkQwOlz
— England Cricket (@englandcricket) July 10, 2024
121 ஓட்டங்களுக்கு சுருண்ட மேற்கிந்திய தீவுகள்
அணித்தலைவர் பிராத்வெய்ட் (6), மெக்கென்ஸி (1) இருவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த அலிக் அதனசி 23 ஓட்டங்களும், கவேம் ஹாட்ஜ் 24 ஓட்டங்களும் எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஹோல்டர், ஜோஷ்வா டி சில்வா, ஷாமர் ஜோசப் மூவரும் அட்கின்சன் பந்துவீச்சில் டக்அவுட் ஆகி வெளியேறினர்.
இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 121 ஓட்டங்களுக்கு சுருண்டது. கஸ் அட்கின்சன் 7 விக்கெட்டுகளும், ஆண்டர்சன், வோக்ஸ் மற்றும் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அரைசதம் விளாசிய ஜக் கிராவ்லே 76 (89) ஓட்டங்களும், ஓலி போப் 57 (74) ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹாரி புரூக் 25 ஓட்டங்களுடனும், ஜோ ரூட் 15 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
Test 50 #12 ?
— England Cricket (@englandcricket) July 10, 2024
Batted, @OPope32 ?@IGCom | #EnglandCricket pic.twitter.com/z0ay0V6dBd
At his dominant best! ?
— England Cricket (@englandcricket) July 10, 2024
Zak in the mood ?@IGCom | #EnglandCricket pic.twitter.com/0CNLsbm7ip
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |