ரோகித் அரைசதம்.. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அபார வெற்றி!
அகமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 3 போடடிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பகல்-இரவு ஆட்டமாக இன்று (பிப்ரவரி 6ம் திகதி) அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித், முதலில் பந்து வீச தேர்வு செய்தார்.
அதன் படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 43.5 ஓவர் முடிவில் 176 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
1ST ODI. WICKET! 43.5: Alzarri Joseph 13(16) ct Suryakumar Yadav b Yuzvendra Chahal, West Indies 176/10 https://t.co/VNmt1PeR9o #INDvWI @Paytm
— BCCI (@BCCI) February 6, 2022
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 57 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் பந்து வீச்சில் சாஹல் அதிகபட்சமாக 4 விக்கெட்களை சாய்த்தார்.
சாஹலை தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட், சிராஸ் 1 விக்கெட் கைப்பற்றினர்.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி, 28வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டி அபார வெற்றிப்பெற்றது.
ரோகித் சர்மா (60), இஷான் கிஷன் (28), விராட் கோலி (8), ரிஷப் பந்த் (11) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
சூர்யகுமார் யாதவ் (34), தீபக் ஹூடா (24) ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற வெற்றி கணக்கில் இந்திய அணி முன்னிலைப்பெற்றுள்ளது.
That's that from the 1st ODI. #TeamIndia win their 1000th ODI by 6 wickets ??
— BCCI (@BCCI) February 6, 2022
Scorecard - https://t.co/6iW0JTcEMv #INDvWI pic.twitter.com/vvFz0ftGB9