201 ரன் வித்தியாசத்தால் இமாலய வெற்றி! வங்காளதேசத்தை பந்தாடிய மேற்கிந்திய தீவுகள்
ஆன்டிகுவாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 201 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
ஜஸ்டின் கிரேவ்ஸ் 115
வங்காளதேசம் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது.
மேற்கிந்திய தீவுகள் 9 விக்கெட்டுக்கு 450 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜஸ்டின் கிரேவ்ஸ் 115 ஓட்டங்களும், மிஃய்லே லூயிஸ் 97 ஓட்டங்களும் எடுத்தனர்.
A triumphant return to the ultimate format!💯
— Windies Cricket (@windiescricket) November 23, 2024
Greaves delivers his a brilliant maiden Test ton!👏🏾 #WIvBAN | #WIHomeForChristmas pic.twitter.com/EcRJILbPS0
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 9 விக்கெட்டுக்கு 269 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
181 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆடிய மேற்கிந்திய தீவுகள் 152 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
Seales strikes early for the first wicket!💥#WIvBAN #WIHomeForChristmas pic.twitter.com/4Me6MLGF4V
— Windies Cricket (@windiescricket) November 23, 2024
334 ஓட்டங்கள் இலக்கு
அதிகபட்சமாக அலிக் அதனசி 42 ஓட்டங்கள் எடுத்தார். தஸ்கின் அகமது 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனைத் தொடர்ந்து 334 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி வங்காளதேசம் களமிறங்கியது.
கேமர் ரோச் (Kemar Roach), ஜேய்டென் சீல்ஸ் மற்றும் அல்சரி ஜோசப் ஆகியோரது மிரட்டலான பந்துவீச்சை அடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்காளதேச அணி 132 ஓட்டங்களுக்கு சுருண்டது.
KEMAR ROACH!😮
— Windies Cricket (@windiescricket) November 25, 2024
YOU CAN NOT DO THAT!#WIvBAN #WIHomeForChristmas pic.twitter.com/e6HrCS9fzK
இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் 201 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஜஸ்டின் கிரேவ்ஸ் (Justin Greaves) ஆட்டநாயகன் விருது பெற்றார்.
A comprehensive win for the West Indies as they take a 1️⃣-0️⃣ lead against Bangladesh in the two-match Test series!#WIvBAN ➡ https://t.co/2fIF2jlA74#WTC25 pic.twitter.com/OjqJHaFeuS
— ICC (@ICC) November 26, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |