சிக்ஸர் மழைபொழிந்து ருத்ரதாண்டவமாடிய கேப்டன்! ஆல்அவுட் ஆன தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் டி20 போட்டி
மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜமைக்காவில் நடந்தது.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது.
சார்லஸ் ஒரு ரன்னில் பார்ட்மேன் ஓவரில் அவுட் ஆனார். பின்னர் வந்த கைல் மேயர்ஸ், அணித்தலைவர் பிரண்டன் கிங்குடன் சேர்ந்து சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
An unstoppable performance by the Windies as they dominate South Africa in the 1st T20I! ??
— FanCode (@FanCode) May 24, 2024
.
.#WIvSA #T20I #cricket #FanCode pic.twitter.com/hUvxAHKi7X
இந்த கூட்டணி 79 ஓட்டங்கள் குவித்தது. பிரண்டன் கிங் சிக்ஸர்களை பறக்கவிட்டு 45 பந்தில் 79 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும்.
அணியின் ஸ்கோர் 134 ஆக உயர்ந்தபோது மேயர்ஸ் 34 (25) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பிளெட்சர் (1), ஆலன் (1), அக்கேல் (2) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
ஹென்றிக்ஸ் அதிரடி
எனினும் ரஸ்டன் சேஸ் ஆட்டமிழக்காமல் 32 (30) ஓட்டங்கள் எடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி 175 ஓட்டங்கள் எடுத்தது. பார்ட்மேன் மற்றும் பெலுக்வாயோ தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ரீஸா ஹென்றிக்ஸ் அதிரடியில் மிரட்ட, ஏனைய வீரர்கள் அடுத்தது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 19.5 ஓவரில் 147 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ருத்ர தண்டவமாடிய ஹென்றிக்ஸ் 51 பந்தில் 6 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 87 ஓட்டங்கள் குவித்தார். மேற்கிந்திய தீவுகள் அணியின் தரப்பில் மேத்யூ போர்டே, மோட்டி தலா 3 விக்கெட்டுகளும், மெக்காய் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Brilliant with the ball.?
— Windies Cricket (@windiescricket) May 23, 2024
Gudakesh Motie produced a match-winning spell in the 2nd innings.???#WIREADY #WIvSA pic.twitter.com/1woFfALc9L
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |