இது கடினமான யுத்தம்! நாங்கள் விரும்பிய முடிவல்ல - இலங்கை கிரிக்கெட் வாரியம்
U19 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தினுரா கலுபனா 53
தென் ஆப்பிரிக்காவில் U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. Diamond Oval மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய இலங்கை அணி 231 ஓட்டங்கள் எடுத்தது. தினுரா கலுபனா 53 ஓட்டங்களும், மல்ஷா தருபதி 42 ஓட்டங்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரனெய்கோ ஸ்மித் 4 விக்கெட்டுகளும், நாதன் எட்வார்ட்ஸ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Another impressive performance by West Indies as they defeat Sri Lanka by three wickets in a thrilling final-over win ?
— ICC (@ICC) January 30, 2024
Match Highlights ? #U19WorldCup pic.twitter.com/2469dh97FP
வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
அதனைத் தொடர்ந்து, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 49.3 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 232 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ஸ்டீவ் வெட்டர்பர்ன் 61 ரன்களும், ஜோர்டான் 39 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் தினுரா கலுபனா, விஷ்வா லஹிரு மற்றும் சினேத் ஜெயவர்த்தேன தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
தோல்விக்கு பின்னர் இலங்கை கிரிக்கெட் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'கடினமான போர், நாங்கள் விரும்பிய முடிவு அல்ல. இறுதி ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்துள்ளது!' என குறிப்பிட்டுள்ளது.
Hard-fought battle, not the ending we wanted. ? Sri Lanka loses by 3 wickets in a nail-biting final over! #YoungLions #U19WorldCup pic.twitter.com/d87dekJZKn
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) January 30, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |