சொன்ன வார்த்தையை காப்பாற்றிய கேப்டன்! உலகக்கோப்பையில் வெற்றி வாகை சூடிய அணி
அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது டி20 போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும்
மேற்கிந்திய தீவுகள் அணி தனது அடுத்த போட்டியில் அயர்லாந்தை 21ஆம் திகதி எதிர்கொள்கிறது
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான போட்டி ஹோபர்ட்டில் நடந்தது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக சார்லஸ் 45 ஓட்டங்கள் எடுத்தார். ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ரஸா 3 விக்கெட்டுகளையும், முஷரபாணி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் ஆடிய ஜிம்பாப்வே 18.2 ஓவர்களில் 122 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
A late flourish with the bat has allowed West Indies to post a score of 153/7 ?
— ICC (@ICC) October 19, 2022
Will they defend this? #WIvZIM | #T20WorldCup | ? Scorecard: https://t.co/73IUt5RZMq pic.twitter.com/WeZkDPmMeL
இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளையும், ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கடந்த போட்டியில் ஸ்காட்லாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்தபோது, அடுத்தப் போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் என மேற்கிந்திய தீவுகள் கேப்டன் பூரன் கூறியிருந்தார். அதன்படியே தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
A crucial win for West Indies!
— ICC (@ICC) October 19, 2022
An excellent performance against Zimbabwe keeps their #T20WorldCup campaign alive ?#WIvZIM | #T20WorldCup | ? Scorecard: https://t.co/73IUt5RrWS pic.twitter.com/pmxRyAqm4b