சொந்த நாட்டுக்காக விளையாட அவர்களை கெஞ்ச வேண்டுமா? கொந்தளித்த பயிற்சியாளர்
*திறமையான வீரர்களை கொண்டிருந்தாலும் ஒரு தொடரை வெல்ல மேற்கிந்திய தீவுகள் அணி போராடி வருகிறது
*நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் கையில் விக்கெட்டுகள் இருந்தும் மேற்கிந்திய தீவுகளால் இலக்கை எட்ட முடியவில்லை
மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருவது குறித்து பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி, தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது.
கிங்ஸ்டனில் நடந்த முதல் போட்டியில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியடைந்தது. இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறுகையில்,
'இது வலிக்கிறது. அதனை புகுத்த வேறு வழியில்லை. ஆனால் நீங்கள் என்ன செய்ய முடியும்? சொந்த நாட்டுக்காக விளையாடுங்கள் என்று அவர்களை கெஞ்ச வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் மேற்கிந்திய தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பினால், நீங்கள் உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
PC: AFP
மேலும், தேசிய அணிக்கு விளையாடுவதை விட இதர கவுண்டி கிரிக்கெட் தொடர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அதிகம் விளையாடுகிறார்கள். இதுகுறித்து சிம்மன்ஸ் கூறும்போது,
'வாழ்க்கை மாறிவிட்டது, மக்கள் (வீரர்கள்) வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் மேற்கிந்திய தீவுகளை தாண்டி தேர்வு செய்தால் அது எப்படி இருக்கும்' என அவர் தெரிவித்ததாக ESPNcricinfo மேற்கோளிட்டுள்ளது.
PC: AFP / Punit Paranjpe