உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய சாம்பியன் அணி! கொந்தளித்த ரசிகர்கள்.. பதவி விலகிய பயிற்சியாளர்
மேற்கிந்திய தீவுகள் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியதால் பதவி விலகிய பயிற்சியாளர் ஃபில் சிம்மோன்ஸ்
ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களிடம் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் - ஃபில் சிம்மோன்ஸ்
மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை பயிற்சியாளர் ஃபில் சிம்மோன்ஸ் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை டி20 தொடரில், மேற்கிந்திய தீவுகள் 2 தோல்விகளை சந்தித்ததால் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் தொடரிலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஃபில் சிம்மோன்ஸ் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
AP
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் கூறுகையில், 'இந்த முடிவு புரிந்துகொள்ள முடியாதது. காயமடைவது அணி மட்டுமல்ல, நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமைமிக்க நாடுகளும் தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இது ஏமாற்றம் மட்டுமின்றி இதயத்தை உடைக்கும் ஒன்று. ஆனால் நாங்கள் திரும்பவும் இல்லை' என தெரிவித்துள்ளார்.
Reuters