மேற்கிந்திய தீவுகள் வெளியேற்றம்! 10 ஆண்டுகளுக்கு பின்..தென் ஆப்பிரிக்கா அரையிறுதிக்கு தகுதி
டி20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில், தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
ரஸ்டன் சேஸ் அரைசதம்
குரூப் 2யில் இடம்பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள், ஆன்டிகுவாவில் நடந்த சூப்பர் 8 சுற்று போட்டியில் மோதின.
இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்லும் என்பதால் இப்போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி மேற்கிந்திய தீவுகள் முதலில் துடுப்பாடியது. ஜென்சென் வீசிய முதல் ஓவரிலேயே ஷாய் ஹோப் (0) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பூரன் 1 ரன்னில் மார்க்ரம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
A big effort with the bat from Roston!??#WIREADY | #T20WorldCup | #WIvSA pic.twitter.com/qPelTuoMEx
— Windies Cricket (@windiescricket) June 24, 2024
பின்னர் களமிறங்கிய ரஸ்டன் சேஸ் தொடக்க வீரர் கைல் மேயர்ஸுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த கூட்டணி 81 ஓட்டங்கள் குவித்தது.
மேயர்ஸ் 34 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஷம்ஸி பந்துவீச்சில் அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து வந்த ரோவ்மன் பாவெல் (1), ரூதர்போர்டு (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க சேஸ் அரைசதம் விளாசினார். அதிரடி காட்டிய அவர் 42 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசி ஷம்ஸி ஓவரில் வெளியேறினார்.
ஷம்ஸி 3 விக்கெட்
ரஸல், அகேல் ஹொசைன் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்தது. ஷம்ஸி 3 விக்கெட்டுகளும், ஜென்சென், மார்க்ரம், மஹாராஜ் மற்றும் ரபாடா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்றிக்ஸ் (0), டி காக் (12) இருவரும் ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அப்போது மழை குறுக்கிட்டதால் 17 ஓவர்களில் 123 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என தென் ஆப்பிரிக்க அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
?? CHANGE OF INNINGS | #SAvWI
— Proteas Men (@ProteasMenCSA) June 24, 2024
?️West Indies post 135/8 in their innings
Time to chase it down! ??#WozaNawe #BePartOfIt#OutOfThisWorld #T20WorldCup pic.twitter.com/jzor3Wb2Cc
அணித்தலைவர் மார்க்ரம் 18 ஓட்டங்களிலும், கிளாசென் 22 ஓட்டங்களிலும் அல்சரி ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். எனினும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் மேற்கிந்திய தீவுகளுக்கு நெருக்கடி கொடுத்தார்.
தென் ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்கு தகுதி
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. டேவிட் மில்லர் 4 ஓட்டங்களிலும், ஸ்டப்ஸ் 29 (27) ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். மஹாராஜ் 2 ஓட்டங்களில் அவுட் ஆக, ஜென்சென் அதிரடியாக ஆடினார்.
கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்திலேயே ஜென்சென் சிக்ஸர் விளாசினார்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. சேஸ் 3 விக்கெட்டுகளும், அல்சரி ஜோசப் மற்றும் ரஸல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். போட்டியை நடத்தும் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை விட்டு வெளியேறியது.
?? RESULT | #SAVWI
— Proteas Men (@ProteasMenCSA) June 24, 2024
A thriller in Antigua comes to an end.
We take it with a 6 from Jansen!
South Africa win by 3 wickets (DLS)#WozaNawe #BePartOfIt#OutOfThisWorld #T20WorldCup pic.twitter.com/fcZXl9FgFt
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |